பக்கம்:வேளிர் வரலாறு.djvu/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங2 வேளிர் வரலாறு. முடமோசியார், குட்டுவன்கீரனார் என்போர். இவருள், மோசியார், ஆயண்டிரன் விண்ணுலகு சென்றதற்கிரங்கி அடியில் வரும் உருக்க மான பாடலைக் கூறினர். (' திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார் அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட் போர்ப்புறு முரசங் கறங்க ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே ”** பெரும்புகழினனாகிய அண்டிரனை விண்ணுலகத்தில் இந்திரன் வாத் திய கோஷங்களுடன் வரவேற்று எதிர்கொண்டான் என்பது இதன் கருத்து; என்றது .ஆய் சுவர்க்கஞ்சென்றான் என்பதாம். இனி, ஆய் அண்டிரனைத்தவிர, ஆய் எயினன் என மற்றொரு வனும் அகநானூற்றிற் பல விடங்களிலுங் கூறப்படுகிறான். இவனைப் பாடியவர் பரணர் முதலியோர். வேள் ஆயைப் பாடியவராக முற் கூறிய புலவர்கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை. இவ்வாய் எயினனும் புலவர்க்குப் பேருபகாரியா யிருந்தவனென்று தெரிகின் றது. இவன் வேளாகிய ஆயின் வேறுபட்டவனென்பதை விளங்க வைத்தற்குப்போலும், எயினன் என்னும் சொற்புணர்ப்புடனே பெரும்பாலும் வழங்கப்படுகின்றான். வேள் - ஆயைத் தனியே அண்டிரன் எனவும் கூறுதல் போல, இவனைத் தனியே எயினன் என வும் வழங்குவர்; இதனை, "வண்மையெயினன் வீழ்ந்தனன்” என வரும் அகநானூற்றடியால் அறிக. இவ் வாயெயினன் மிஞிலி யென்பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந்தவனென்பது அக நானூற்றிற் பாணர்பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. ஆனால், வேள்- ஆயின் சாவைக்குறிக்கும் புறப்பாடல்கள் அச் செய்தி கூற வில்லை. மேலே கூறிய ஆய் இருவரும் ஒருவராயின், அகப்பாடல் களில் மிகுதியாகப் பயிலும் எயினன் என்னும் அடைமொழி ஆயைப்

  • இதன்பொருள்:-திண்ணிய தேரை இரவலர்க்குக் கொடுத்த குளிர்ந்த

மாலையையுடைய ஆய் வருகிறான் என்று கருதி, ஒள்ளிய தொடியையும் வச் சிராயுதத்தையுமுடைய இந்திரனது கோயிலுள் போர்த்தலுற்ற முரசுமுழங்க வானத்தில் ஓர் ஒசை எழுந்தது-என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/48&oldid=990614" இலிருந்து மீள்விக்கப்பட்டது