பக்கம்:வேளிர் வரலாறு.djvu/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - ஆய். நம் பற்றிய புறப்பாடல்களில் பயிலாதிருத்தற்கும், புறப்பாடல்களில் வேள், அண்டிரன் என ஆய்க்கு வழங்கும் அடைமொழிகள் எயின னைப்பற்றிய அகப்பாடல்களிற் பயிலா திருத்தற்கும் சிறந்த காரண மின்மையால், அவ்விருவரும் ஒருவரல்லரென்பதே ஒருதலை. அன்றி யும் எயினனாகிய ஆய் பொதியின்மலைக்கு உரியவனென்று கூறப் படாமல், பெரிய காடொன்றற்குத் தலைவனாக வழங்கியிருத்தலுங் கண்டுகொள்க. இவ்வாய்-எயினன் ஏழிற்குன்றத்திற்குரிய நன்ன னது படைத்தலைவனாக ஊகிக்கப்படுகிறான். இவற்றால், ஆய் அண்டிர 'னையும் ஆய் 'எயினனையும் ஒருவராகக் கொள்ளாது வேறுவேறு தலைவர்களென்று கொள்ளுதலே பொருத்தம் என்பது தெரியலாம். இனி, இற்றைக்கு 1750- ஆண்டுகட்கு முன்பு தாலமி (Ptolemy) என்னும் யவனாசிரியர் இப்பரதகண்டமுழுதும் சுற்றி, அக்காலத்துப் பூமியி னியல்புகளையும் அரசிய னிலைகளையும் பிறவற்றையும் பற்றி நீண்ட குறிப்பொன் றெழுதியிருக்கின்றனர். அக்குறிப்பில், தென் னாட்டைப்பற்றிய பழங்காலச் செய்திகள் சிலவும் காணலாம். இவ் வாசிரியர் இங்கு வந்த சமயம் கடைச்சங்க காலமாகவேண்டும். யவனர்கள் முன்னாளிற் சோணாட்டுப் பெருந் துறைமுகப்பட்டினமா யிருந்த தொண்டி முசிரி முதலிய இடங்களில் தம் கப்பல்களுடன் இறங்கி, அந்நாட்டுக்குரிய பண்டங்களாகிய மிளகு முதலியவற்றை விலைக்குப் பெற்றுச் செல்வதும் உண்ணாடுகளில் வியாபாரஞ் செய்வ தும் பெருவழக்கமாயிருந்தனவென்பது, தாலமி முதலியோர் குறிப் புக்களால் விளங்குதலோடு பழைய சங்கநூல்களாலும் நன்கறியப் படுகின்றது. இதனை "'யவனர் தந்த வினைமா ணன்கலம்-பொன்னொடு வந்து கறியொடு பெயரும்-வளங்கெழு முசிரி ” (அகம்) என்பன போன்றவற்றான் அறிக. (கறி - மிளகு) இனித், தாலமியாசிரியர் தம் குறிப்பில் தமிழகத்துள்ள பல நகரங்களைப்பற்றி எழுதியவிடத் தில் ஆயின் நாட்டையும், அதனுள் ஐந்து துறைமுகங்களையுங் குறிக் கின்றார். இவ்வாறு, 1750- ஆண்டுகட்கு முன்னிருந்த யவனாசிரியர் ஆயது. நாட்டைக் குறித்திருத்தலால், அக்காலத்துக்கும் முன்பே தமிழகத்து விளங்கியவர், ஆய் வமிசத்தோர் என்பது வெளி யாகின்றது. இவ்வள்ளல், கடைச்சங்க காலத்து அரசர்பலர்க்குச் சிறிது முற்பட்டவனென்பது புறநானூற்றால் ஊகிக்கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/49&oldid=990613" இலிருந்து மீள்விக்கப்பட்டது