பக்கம்:வேளிர் வரலாறு.djvu/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நசு வேளிர் வரலாறு. இனி, வேள் ஆவியின் வரலாறுகள் விசேடமாக நூல்களினின்று அறியப்படவில்லை. பதிற்றுப்பத்து - சு-- அ-ம் பத்துக்களின் பதிகங்களால், வேளாவிக்கோமான் என்பவனுக்குப் பதுமன் என்ற பெயர் வழங்கியதென்பதும், இப் பதுமனுடைய மகளிர் இருவர் - நெடுஞ்சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேரவரசர் களுக்கு முறையே வாழ்க்கைப்பட்டவரென்பதும், இம் மகளிர் வயிற்றில், - நெடுஞ்சேரலாதனுக்குக் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ஆடுகோட்பாட்டுச்சேரலாதனும்; செல்வக்கடுங்கோவுக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையும் முறையே பிறந்த மக்களென்பதும் விளங்குகின்றன. இதனால், பதுமன் எனப் பெயர் பெற்ற வேளாவிக்கோ, சேர அரசர் பலர்க்குப் பாட்டனானவ னென் பது அறியப்படும். இச் சேரர்களில், தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம்பத்தாற் பாடிய அரிசில்கிழார் என்ற புலவர், ஆவிவமிசத்தவனும் வள்ளலுமாகிய பேக னென்பவனாற் றுறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியை அவ னோடு சேர்த்தல் வேண்டி, அவ் வள்ளலைப் பாடின செய்தி கசக-ம் புறப்பாட்டாற் றெரிகிறது. இதனால், வேளாவிக்கோவின் மகள் மகனாகிய பெருஞ்சேரலிரும்பொறையும், வேள் - பேகனும் ஒருகாலத் தவராதல் உணரலாம். இவ் விரும்பொறைக்கு வேளாவிக்கோப் பதுமன் மாதாமகனாய் அணிமைக்காலத்தவனாகலின், பேகன் என்ற வள்ளற்கும் அவன் சமீபித்தவனென்பது சொல்லாதே அமையும். இத்துணைச் சமீபகாலத்துக்குள், பதுமன் என்ற வேளாவியின் வழியினர் பெருக ஆவியர்” என வழங்கப்பட்டார் என்பதினும், அப் பதுமனுக்கும் முற்பட்ட காலத்தே ஆவி என்ற பெயரோடு ஒருவன் இருந்தனனெனவும், அவன் வழியினரே ஆவியரெனவும், வேளாவிக்கோமான் பதுமனும் வையாவிக்கோப் பெரும் பேகனும் அக் குடியினராவரெனவும் கொள்ளுதல் தகுதியுடைத்தாகும். இங்ஙனமன்றி, வேளாவிக்கோப்பதுமனே ஆவியர்குடி முதல்வனாகிய ஆவி எனக்கொண்டு, அவன் தானிருந்த காலத்தே தன்வழி பெருக வும் தன் பெயர் சிறக்கவும் நின்றான் - எனக் கூறினும் இழுக்காது. இங்ஙனம், வேளாவி,சேரர்வழியிற் பெண்முறையில் முன்னோனாதல் பற்றிப்போலும், அச் சேரரது தலைநகராகிய வஞ்சிப்புறத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/52&oldid=990610" இலிருந்து மீள்விக்கப்பட்டது