பக்கம்:வேளிர் வரலாறு.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூவு வேளிர் வரலாறு. நகரம் உறத்தூர் எனவும்-"யாழிசை மறுகி னீடூர் கிழவோன் - வாய்வா ளெவ்வி.............. உறத்தூர்” என்னும் அகப்பாட்டடிகள் குறிக்கின்றன. தேவாரம்பெற்ற சோணாட்டுச் சிவஸ்தலங்களுள் திருநீடூர் என்பதொன்றுண்டு. மிழலைக்கூற்றத்தே மிழலை எனப் பெயர் வாய்ந்த தனியூர் ஒன்றுண்டென்பதும், அது சிவஸ்தலமென் பதும் * 'மிழலைநாட்டுமிழலையே வெண்ணிநாட்டுமிழலையே" என வரும் ஸ்ரீ-சுந்தரமூர்த்திகள் தேவாரப்பகுதியால் வெளியாம். (பொது கஉகூக-ம் பக்கம்) மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோணாட்டின் கடற்கரைப் பகுதியாம்போது, நீடூர் மிழலை என்பவை, சிவஸ்தலங்களாகிய திருநீடூரும் திருவீழிமிழலையுமாகக் கொள்ளல் பொருந்துவதாம். இம் மிழலைக்கூற்றம் பாண்டி நாட்டின் சில பகுதி யையும் முன்பு கொண்டிருந்ததென்பது, திருவாலவாயுடையார் புரா ணத்தில் திருப்பெருந்துறையைச் சார்ந்த பிரதேசம் மிழலைக்கூற் றத்தைச் சார்ந்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தலால் வெளியாகின் றது. இனி எவ்வியின் மற்றோர் ஊராகிய உறத்தூர் நீடாமங்கலத் தையடுத்து உள்ளது. ஒருகால், இந்நீடாமங்கலமே நீடூர் ஆயினும் ஆகலாம். இம் மிழலைக்கூற்றத்துக்குத் தலைவனாகிய வேள் எவ்வி அருங் குணங்களும் பெருங்கொடையும் வாய்ந்தவன் என்பது புறநானூற் றில் இவனைப்பற்றியுள்ள பாடல்களால் விளங்குவனவாம்; "'ஓம்பா வீகை மாவேள் எவ்வி” என மாங்குடிகிழாரும் (புறம்-உச) (இரும் பாணொக்கற் றலைவன்” என வெள்ளெருக்கலையாரும் (ஷை) புகழ்தல் காண்க. இப் புலவருள் வெள்ளெருக்கிலையார் பாடிய புறப்பாடல் இரண்டால் ஒரு பெரும்போரில் எவ்வி புண்ணுற்று வீழ்ந்த செய்தி யும், அவன் அப்போரில் இறந்ததன் பின் அப்புலவர் இரங்கிய நிலை

  • இஃது ஆனந்தத்தாண்டவபுரம் ரயில்வேஸ்டேஷனுக்குத் தென்மேற்

கில் ஒரு மைலில் உள்ளது.

  • சோணாட்டில், பெருவேளூர், கீழ்வேளூர், புள்ளிருக்கும்வேளூர், வேள்

குடி என வழங்கும் தலங்களின் பெயர்களை நோக்குமிடத்தும், வேளிரால் ஆளப் பட்டது அப்பகுதி என்பது புலனாம். + நரி குதிரையாக்கிய திருவிளையாடல். பாட்டு - கக. மஹாமஹோபாத் யாயர்: ப்ரும்மஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள் அரும்பதவுரை பார்க்க. பெரு மிழலைக் குறும்பர் என்ற நாயனார் இம் மிழலைநாட்டுத் தலைவராவர்.,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/54&oldid=990608" இலிருந்து மீள்விக்கப்பட்டது