பக்கம்:வேளிர் வரலாறு.djvu/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. எனக் கூறுதலால், அப்பாண்டியன் வேள் எவ்வியின் மிழலைக்கூற் றத்தை ஒருகாலத்து வென்றுகொண்டவன் என்று தெரிகிறது. ஆனால், இச்செழியன் சிறிது பிற்காலத்தவனாகத் தெரிதலின், வேள் எவ்வியுடன் போர் நிகழ்த்தி அவனாட்டைக் கொண்டவன் என்று நிச்சயிக்கக்கூடவில்லை. இனி, இந்நெடுஞ்செழியனோடு தலையாலங் கானத்து எதிர்த்தவர், கெடு நிலமன்னர் இருவரும் குறுநிலமன்னர் ஐவருமாவர் என்றும், இவ்வெழுவரில் இருங்கோவேண்மான் என் பவன் ஒருவனென்றும் கூக-ம் அகப்பாட்டில் நக்கீரனார் கூறுகின் றார். இவ் விருங்கோவேண்மானை எவ்விதொல்குடி” யில் உதித் தவன் என்று கபிலர் என்ற புலவர் பெருமான் கூறுவர். இதனால் நெடுஞ்செழியன் எவ்வியுடனன்றி அவன் வழியினனாகிய இருங்கோ வேளுடன் போர்புரிந்திருத்தல் கூடுமென்றும், அப்போரில் அவ் விருங்கோவேள் தன் முன்னோரிடத்திருந்து பெற்ற மிழலைக்கூற் றத்தை இழந்திருத்தல் கூடுமென்றும் கருதலாம். ஆகவே, மேற் குறித்த புறப்பாட்டடியிற் குறித்தபடி, எவ்வியின் மிழலையை நெடுஞ் செழியன் கொண்டான் என்பதற்கு, 'எவ்வி முன்பாட்சிபுரிந்த மிழலை' என மிழலைக்கு விசேடணமாக்கிப் பொருள்கொள்ளுதலே பொருத்தமாகத் தோற்றுகின்றது. இவ்வாறன்றி, பாண்டியன் நெடுஞ்செழியன் எவ்வியுடன் நேரிற்பொருது அவனாட்டைக்கொண் டவன் என்றல், ஆராயத்தக்கதாம். இவ் வேள் எவ்வி, அன்னி என்பவனுக்கு நட்பினன் என்பதும், அவ் வன்னி, தன் காவன்மாமாகிய புன்னையைத் திதியன் என்பான் அழிக்க வந்தபோது கடுஞ்சினங்கொண்டு போர்க்கு எழும்ப, அச் சினத்தை ஆற்றவேண்டி அவ்வன்னிக்கு வேள் எவ்வி வேண்டிய நன்மொழி கூறவும் அவன் கேளாமல் திதியனோடு பொருத்து வீழ்ந் தானென்பதும் கஉசு -ம் அகப்பாட்டால் தெரியவருகின்றன. இனிக் கபிலர் என்ற புலவர் பெருமான், தம் முயிர்த்தோழ னான வேள் -பாரி என்ற வள்ளலை மாற்றரசர் கூடி வஞ்சித்துக்கொன் றபின், அவ்வள்ளலின் மகளிர் இருவரையும் தாமே அழைத்துக் கொண்டு இருங்கோவேள் என்பானிடம் சென்று, அம் மகளிரை மணந்துகொள்ளுமாறு வேண்ட அதனை ஏற்காது அவ்வேள் மறுத் தனன் என்றும், அப்போது புலவர் அவனை நோக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/56&oldid=990606" இலிருந்து மீள்விக்கப்பட்டது