பக்கம்:வேளிர் வரலாறு.djvu/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - எவ்வி. எவ்வி தொல்குடிப் படீஇயர்; மற்றவர் கைவண் பாரி மகளிர்; என்றவென் தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும்!” எனச் சினந்து கூறினரென்றும் உ0 உ-ம் புறப்பாட்டால் தெரிகின் றன. இவ் வடிகளின் உரையிலே, -"இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; பின்னை இவர் கைவண்மையுடைய பாரி - மகளிர்' என்று சொல்லிய எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப் பாயாக; பெருமானே!” எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இதனால், 'கைவண்பாரி மகளிராகிய இவர் எவ்விகுடியில் (வாழ்க்கைப்) படு வார்களாக' என்பதே உரைகாரர் கருதிய பொருளாதல் தெரியலாம். ஆகவே, எவ்விதொல்குடியில் உதித்தவன் இருங்கோவேள் என்பது பெறப்படுதல் காண்க. இவ் விருங்கோவேளின் முன்னோர் சிற்றர யம் பேரரயம் எனப்பட்ட நகரங்களை ஆண்டவர்களென்பதும், கழாத் தலையார் என்ற நல்லிசைப்புலவரை இவன்முன்னோர் இகழ்ந்ததன் பயனாக, அப் புலவர் பெருமானால் சபிக்கப்பெற்று, அவர்கள் மண் மாரியால் அழிந்தனவென்றும் - "இருபாற் பெயரிய உருகெழு மூதூர்க் கோடிபால வடுக்கிய பொருணுமக் குதவிய நீடு நிலை யரையத்துக் கேடுங் கேளினி நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத்தலையை இகழ்ந்த தன் பயனே இயறேர் அண்ணல்” எனக் கபிலர் பாடுதலால் விளங்குகிறது. (புறம்-உ02) சோணாட் டில் திருவிடைமருதூரை யடுத்து, அரையகுளமென்றும் கழாத்தலை மேடு என்றுங் கூறப்படும் இடங்கள் உள்ளன வென்றும், பட்டுக் கோட்டைத் தாலூகாவிலும், அரையகுளம் பட்டணக்காடு எனப் பட்டவை யுண்டென்றும், பிற்கூறியது பழையநகரமொன்றின் அழி பாடாகத் தெரிவதென்றும் கேள்விப்படுதலால், முற்கூறிய கதையின் உண்மையை இச்செய்திகள் குறிப்பிக்கின்றன எனலாம். -

0:-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/57&oldid=990605" இலிருந்து மீள்விக்கப்பட்டது