பக்கம்:வேளிர் வரலாறு.djvu/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பேகன். மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளி படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக் கடா அ யானைக் கலிமான் பேக!” என வன்பரணரும் (ஷை - காரு) வானம் வாய்த்த வளமலைக் கவாற் கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் பெருங்கன் னாடன் பேகன்" (சிறுபாண் - அடி. அசு - எ) என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கூறுதல் காண்க. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் - எல்லை நீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை -- இரவாம லீந்த இறைவர்போ னீயுங் - கா வாம லீகை கடன் என்புழி ஐயனாரிதனாரும் இச்செய்தியைக் குறித் தார். இவ்வழகிய வரலாற்றால், வேறு பயன் கருதாது உயிர்களி டத்துப் பேகனுக்கு இயல்பாகவேயிருந்த பெருங்கருணைத்திறம் விளங்கும். "எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென - மறுமைநோக் கின்றோ அன்றேபிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே' என, இவ்வள்ளலை நோக்கிப் பரணர் என்ற புலவர் பெருமான் புகழ்ந் திருத்தலும் ஈன்டு நோக்கற்பாலது. இங்ஙனம் பேகனென்னும் பெருந்தகை வள்ளலுக்கு உரிய மனைவியானவள், கண்ணகி யென்ற கற்புடையாசியாவள். இம்மனை யாளுடன் இல்லறம் புரிந்துவந்த பேகனது நல்வாழ்க்கையில் திடீ ரென்று மாறுதல் ஒன்று நிகழ்வதாயிற்று. அந்தோ! கண்ணகி என் னும் பெயர்வாய்ந்த மகளிர்க்கெல்லாம் தங்கணவர் பாத்தையர் நலம் நுகர்ந்து மகிழ்ந்திருக்கத் தாம் தனித்திருந்து அவர் பிரிவாற்றாது வருந்துதலே இயல்பாயிற்றுப் போலும். கோவலனுடைய கற்புடை மனைவியாகிய கண்ணகி என்பாள், இளமையில் தன் கணவன் பரத்தை வயத்தனாய் நின்ற துயரமிக்கு வருந்தியது போலவே, இக்கண்ணகிக் கும், தன் கணவனாகிய பேகன் பொதுமகளொருத்தி மோகத்தில் வீழ்ந்தமையால் ஆற்றாமை பெரிதாயிற்று. அருங்குணமும் பெருங் கொடை வள்ளலுமாகிய இப்பெருந்தகை, இங்ஙனம் பொதுமகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/59&oldid=990603" இலிருந்து மீள்விக்கப்பட்டது