பக்கம்:வேளிர் வரலாறு.djvu/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச வேளிர் வரலாறு. வலைப்பட்டு, தன்னரிய மனைவியைப்பற்றிய சிந்தையேயில்லாது உறைந்தது, விதியின் வலிபோலும். பேகனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த இப்பிரிவு பற்றிய செய்தியானது. அவர்களது இல்வாழ்க் கைக் காலத்தே பெரிதும் உபசரிக்கப் பெற்றுப் பெரும்பயனடைந்த புலவர் பெருமக்களாகிய கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன் றூர்கிழார் என்ற சான்றோர்கட்கு எட்டியதும், அப்புலவர்கள் முன் போலக் கண்ணகியும் பேகனும் சேர்ந்துவாழ முயல்வாராயினர். இவர்கள் பேகனையடைந்து, அவன் மனைவி கண்ணகியின் வாழ்க்கை யில் இரக்கந்தோன்றக் கூறும் மாட்சி, பெரிதும் வியக்கற்பாலது. இப்புலவரிற் கபிலர் என்ற புலவர் பெருமான் பேகனிடஞ் சென்று அவனை நோக்கி-"சிறந்த மலைநாடனே! போர்வன்மையும் கொடைத் திறமுமுடைய பேக! நேற்று வழிநடந்து வருந்திய என் சுற்றம் பசித்ததால், உயர்ந்த மலையிடத்துள்ள சிறிய ஊரில் உன்வாயிற் கண்ணே வந்து நின்னையும் நின்மலையையும் வாழ்த்தி யான் பாடி நின் றேனாக, அப்போது துக்கத்துடன் சொரிந்த கண்ணீரையுடையவ ளாய் அக்கண்ணீர் முலையிடத்தை நனைக்கும்படி பொருமி, வேய்ங் குழல் இரங்கியொலிப்பதுபோல, ஒருத்தி அழுதாள்; இரங்கத்தக்க அன்னாள், யார் கொல்லோ, சொல்க என்று, அவ்வள்ளலுங் கேட் டிரங்கும்படி கூறினர். இவ்வாறே பரணரும், * அவ்வள்ளலைக்கண்டு 'நேற்று மாலையில் நின்மழைமிகுந்த காட்டை யாங்கள்பாடிக்கொண்டு வந்தேமாக, நீலமலர் போன்ற கண்களினின்றும் கலங்கி வீழ்ந்த நீர்த்துளிகள், பூணையுடைய தன் மார்பகத்தை நனைக்கும்படி வருந்தி நின்ற ஒருத்தி எம்முன் வந்து தோன்ற, அவளை நோக்கி யாங்கள், 'இளையோய்! எங்களுடைய நட்பைவிரும்பும் தலைவனாகிய பேகனுக்கு நீ உறவினையோ' என்று வணங்கக் கேட்டபோது, அவள், காந்தண் மொட்டுப்போன்ற தன் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு 'நாங்கள் அவனுடைய உறவினர் அல்லேம்; கேளுங்கள், விளங்கிய புகழையுடைய பேகன் எம்மை யொக்கும் ஒருத்தியுடைய அழகைக் காதலித்துத் தன் தேரில் இந்நல்லூ ரின்கண் அடிக்கடி வரும்

  • இவர் பாடியது "அருளாயாகலோ கொடிதே” (புறம்-கசச) என்பது. "இது,

கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக் கிளைவகைப் பாடாண்பாட்டு என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருளதி. பக் . உக்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/60&oldid=990602" இலிருந்து மீள்விக்கப்பட்டது