பக்கம்:வேளிர் வரலாறு.djvu/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பேகன். சடு வன் என்று சொல்லுவர்' என்று கூறினாள்; இஃது என்னே! தலைவ! நீ அவட்கு இரங்கி அருள்பண்ணாதிருத்தல் மிகக் கொடியது" "மயி அக்கிரங்கிப் போர்வையளித்த பெருங்கருணையுடைய பேக! யாம் இப்போது பசித்து நின்பால் வரவில்லை; எம்மாற் றாங்கப்படவேண்டிய சுற்றமும் இப்போது இல்லை; பேரருளாள ! நீ அறிநெறியில் ஒழுக வேண்டும் என்பதே யாம் இரக்கும் பரிசில்: ஆதலால் நீ உன் தேரில் ஏறிச்சென்று, பார்ப்பதற்கரிய துக்கத்தைக் கொண்ட உன் கற்புடை மனைவியின் சிந்தாகுலத்தைத் தீர்ப்பாயாக” என்றனர். இவ்வாறே, தாம் பரிசில் வேண்டி வரவில்லை யென்றும், நீ அவளைச்சென்று சேர் தலே யாம் வேண்டுவதென்றும்- அரிசில் கிழாரும், பெருங்குன்றூர் கிழாரும் பேகனைக்கண்டு பாடினர். * இங்ஙனம், அக்காலத்தே தமிழ் நாட்டுப் பெருமக்களாய் விளங்கிய புலவர் வேண்டுகோளுக்குப் பே கன் இன்னது செய்தான் என்பது தெரிந்திலதேனும், வேண்டியோர் க்கு வேண்டியாங்களிக்கும் பெருவள்ளலாகிய அவன், இத்தகைய பெருமக்கள் நெடுந்தூரத்திலிருந்து வந்து தன்பால் வேண்டிய விருப் பத்தை நிறைவேற்றாதிரான் என்றே நம்பலாம். இனி இவ்வேள் - பேகனைப்பாடிய அரிசில் கிழார், வேளாவிக் கோமான் பதுமனுக்கு மகள் வயிற்றுப் பெயரனாகிய, தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தாற் புகழ்ந்துள்ளார். எனவே, வேளாவிக்கோவின் வழியினனாகிய பேக னும், அவ்வாவிக்கோவின் மகள் மகனாகிய பெருஞ்சேரல் இரும் பொறையும் ஒருகாலத்தவராதல் பெறப்படும். ஒருகால், பேகன், வேளாவிக்கோமான் பதுமனுக்கு மகனாகவேனும் அன்றி மகன் மகனா கவேனும் இருத்தலும் கூடும்.வையாவிக்கோப் பெரும்பேகன் என்று இவ்வள்ளல் வழங்கப்படுதலால், இவனூர் வையாவிபுரியாகிய ஆவி நன்குடி என்பது தெரிகிறது. இவ்வாவிநன்குடிக்குச் 'சித்தன் வாழ்வு' என்பதும் ஒரு பழம்பெயராம். இதனை, நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ் - வில்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லாவப் - பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் - நாட்

  • இப்புலவர்கள் பாடல்களைப் புறநானூற்றில் கசங - முதல் கசஎ - வரை

யுள்ள பாடல்களால் உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/61&oldid=990631" இலிருந்து மீள்விக்கப்பட்டது