பக்கம்:வேளிர் வரலாறு.djvu/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு வேளிர் வரலாறு. டுடைத்து நல்ல தமிழ்” என்னும் ஒளவைவாக்கானும் அறிக*. இப் பாட்டாற் சித்தன் வாழ்வாகிய ஆவினன்குடியில், சங்கநாளில் அந் தணர் மிகுந்திருந்தமை வெளியாம். சித்தன் வாழ்வு என்பது பழநி யாண்டவர், கோயில் கொண்டமைபற்றி வந்தபெயர்: சித்தன் - பிள் ளையாருக்குத் திருநாமம்” என்பர் நச்சினார்க்கினியரும். வேள் - பாரி. பழைய வேளிருடைய வரலாறுகளுள்ளே பாரி என்னும் பெருந் தகையின் சரித்திரம், இனிமையும் பெருமையும் இரக்கமுமுடைய தாகும். மாரியன்ன வரையா ஈகையால் உலகமுள்ளளவும் ஒங்கு புகழ் நிறுவிய தமிழ்வள்ளல்களில், இவ்வேளிர் தலைவனையே முதல் வனாகச் சொல்லல் தகும் தமிழ் மூவேந்தரும் மற்றைச் சிற்றரசர் களும்போல, இப்பாரி, நாடும் பொருளும் நன்கு படைத்தவனில்லை யாயினும், இவனது வள்ளன்மை அவரெல்லாரையும் பெரிதுங் கீழ்ப் பட வைத்தமையால், இவனது பெருமை மலைமேல் விளக்குப்போல் விளங்குவதாயிற்று. இவ்வேளிர் தலைவனது வள்ளன்மையையே, கொடைப்பெருமைக்கு ஓர் எல்லைக்கல்லாகப் பிற்காலத்துப் பெரியோர் களுங் குறித்து வைப்பாராயினர். எத்தனையோ வள்ளல்கள் முன் னாளில் விளங்கியிருப்பினும், கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்னும் அருமைத் திருவாக்காற் குறிக் கப்பட்டவன், இப்பெருந்தகையேயன்றோ. முற்காலத்தே புலவரை யும் இரவலரையும் இவன் எவ்வாறு போற்றிவந்தவ னென்பதும், பண்டைச் செந்தமிழ்ப் புலவர் இவனது தடங்கருணையையும் பெருங் கொடையையும் எங்ஙனம் புகழ்ந்துள்ளா ரென்பதும், பிறவரலாறு களும் சங்க நூல்களில் இவ்வள்ளலைப்பற்றிய பாடல்களை நோக்கு வார்க்கு நன்கு விளங்கும். அந்நூல்களிலும் பிறவற்றிலும் இவனது வாழ்க்கைபற்றிக் கூறும் வரலாறுகளை, செவ்வனம் ஆராய்ந்து ஸேது

  • திருமுருகாற்றுப்படையுரை; பக் - உஎ ; நச்சினார்க்கினியர், சித்தன்

வாழ்வு என்பது ஆவி நன்குடிக்கு ஒரு பெயர் என்றெழுதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/62&oldid=990630" இலிருந்து மீள்விக்கப்பட்டது