பக்கம்:வேளிர் வரலாறு.djvu/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. சஎ ஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ: ரா. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகை இரண்டாந் தொகுதியில், ஒளவையார், பாரிமகளிர் என்ற வியாசங்களிலே நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றை இவ்வியாசத்துக்கேற்ப ஒழுங்குபடுத்துக்கூறிப், பின்பு இவ்வள்ளலைப்பற்றி யாமறிந்த சில விசேடர் களையும் எழுதுவேம். பாரி என்பான், தமிழ்நாட்டிற் பண்டைக்காலத்தே பெரும் புகழ்பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன். செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும்; 'பாரி பறநாட் டுப் பெண்டிரடி' 'பறநாட்டுப் பெருங்கொற்றனார்' என வழங்குவது காண்க. இவன் பறம்பென்னும் பெயருடைய வளமலைக்கண்ணே வலியுடையதோர் போரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கை யாக்கி அதன்பாற் சிறக்கவீற்றிருந்தோன்; இவனதுமலையரண்,பெரிய அழகும் அரிய காவலும் உடையது (நற்றிணை, உருகூ) எனவும், பகை வர் முற்றிய காலத்தும் வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்துவாழ்வார் இனிதுண்டு செருக்குதற்குரிய மூங்கில் நெல்லும் பலாப்பழமும் வள்ளிக்கிழங்கும் நறுந்தேனும் தன்பால்மிக்கதெனவும், (புறம்-காக) என்றும் வற்றாததும் பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரை யுடைய பைஞ்சுனையொன்று தன்கண் உடையதெனவும் (அகம்- எஅ; குறுந்தொகை - காசு) சான்றோர் கூறுவர். இப்பறம்பு பாண்டி நாட்டதென்பது, "வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்ட லமே” என்னும் பாண்டிமண்டலசதகச் செய்யுளாற் (கச) புலப்படு கிறது. இப்பாரி, 'உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை - வாய் மொழிக் கபிலன்” (அகம் - எஅ) என நல்லிசைப்புலவர்களால் மேம் படுத்தேத்தப்பட்ட கபிலர் என்னும் புலவர் தலைவர்க்கு உயிர்த்தோழ னானவன். (புறம் - உலக.) "புலங் கந்தாக இரவலர் செலினே - வண புரை களிற்றொடு நன்கல னீயும் - உரைசால் வண்புகழ்ப்பாரி" (அகம். கூடங) என ஒளவையார் பாடுதலால், இவன் அவராலும் பேரன்பு பாராட்டப்பட்டவனென்பது புலனாம். இவன் நிழலில்லாத நீண்ட வழியிற் றனிமாம் போல நின்று, தன்னையடைந்த அறிஞர் மடவர் வலியர் மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து, மூவேந்தரினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/63&oldid=990629" இலிருந்து மீள்விக்கப்பட்டது