பக்கம்:வேளிர் வரலாறு.djvu/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. ருரு யிடையில் காட்சி நின்னோடு உடனுறை வாக்குக: உயர்ந்த பாலே" என்ற பாடலால் உள்ளமுருகி, பிராயோபவேச் செய்தற்கு வடக் கிருந்து * உயிர் நீத்தனர். இப்பாட்டில், "நட்பிற்கொல்லாது-ஒருங்கு வரல்விடா தொழிகெனக் கூறி என வருதலால், பாரியுடன் தாமும் இறக்கத் துணிந்திருந்த கபிலரை அவ்வள்ளல் தடுத்தவன் என்பது உணரப்படும். இங்ஙனம் கபிலரைத் தடுத்தது, பாரி, தன்மகளிரை இப்புலவரைக்கொண்டு வாழ்க்கைப்படுத்தற்குப் போலும். இவ்வளவே, புறநானூறு முதலிய பழைய நூல்களிற் பாரியின் வரலாறாகக் காணப்படுவன. ஆயினும், பிற்காலத்தவரால் தொகுக் கப்பட்டதும் பலசரித்திர விசேடங்களைக் கொண்டதுமான தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலினின்று, பாரிமகளிர் பார்ப்பார்ப் படுக் கப்பட்டபின் நிகழ்ந்த வேறுசில செய்திகளையும் "ஒளவையார்" என்ற வியாசத்தே, ஸேதுஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையாவன:- கபிலர், அரசர் ஒரு வரும் இயையாமையாற் பாரிமகளிரை மணம்புரிந்து கொடுக்கவிய லாமல், அவரைத் தமக்கு வேண்டிய பார்ப்பார்சிலரது பாதுகாவலில் வைத்துவிட்டுத் தாம் வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்ற செய்தி, ஒளவையார் என்னும் அருந்தமிழ் மூதாட்டிக்குத் தெரியவர, அவர் மேனிகழ்ந்தவற்றுக்கு மன நொந்து, அப்பாரி மகளிர் இருந்த திருக் கோவலூர்க்குச் சென்று அம்மகளிரைக்கண்டு அவர்க்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும் வருந்தி, மழையால் நனைந்து வந்த தமக்கு அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை அளிக்க, அப்போது -

  • வடக்கிருத்தல் என்பது, கிழக்குமுகமாகத் தருப்பைகளைப்பரப்பி வடக்கு

நோக்கியிருந்து, தம்முயிர்விடச் செய்து கொள்ளும் ஒரு மஹாவிரதமாம். சங்க காலத்தில் இவ்வழக்கு மிகுதியாக வழங்கியதென்பது, பழைய நூல்களால் நன் கறியப்படுகின்றது. இதனைப் 'பிராயோபவேசம்' என்பர் வடநூலார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/71&oldid=990621" இலிருந்து மீள்விக்கப்பட்டது