பக்கம்:வேளிர் வரலாறு.djvu/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. 1 என்ற வெண்பாவைக் கூறி, அவர்களை நன்னிலையில் நிறுத்துங் கவலை யே பெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகன் என்னும் அரசனொ ருவனை, இவர்களை மணம்புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். அவ்வரசன் உடம்பட்டதும், இத்திருமணத்திற்குத் தாம் பெற்ற தெய் வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உண்டாக்கி, மூவேந்தர்க் கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம் அறிவின்வலியாற் கோவலூர்க்கு வரவழைத்து அப்பாரிமகளி ரது பெருமணத்தைச் சிறப்ப இயற்றினர். இவ்வாறு, பாரி மகளிர் மணம் ஒளவையாராற் சிறக்க நிகழ்த்தப்பட்டமை அறியப்படுதலால், 'கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தன' ரென்பது, அவர் அம் மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்தமையையே குறிக்கும். இப்பெருமணத்தில் ஒளவையார், பனந்துண்டம் பழந்தரவும், பெண் ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொ ழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை உணர்த்தினர் என் பர். பெண்ணையாறு இவர்பாடலுக்கு நெய் பால் கொணர்ந்துவந்த கதை, வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாராலும் - "ஒளவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி யருந்தமி ழறிவினாற் சிறந்து தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத் திருமுனைப் பாடிநன் னாடு” என எடுத்தாளப்பட்டமை காண்க. மேற்கூறியவற்றை யெல்லாம் தமிழ் நாவலர் சரிதையில் - ஒளவையார் அங்கவை சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாயகனை அழைத்த வெண்பா. ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க் கரியுருவக் கங்காளன் செம்மல்- கரிமுகவன் கண்ணால வோலை கடிதெழுத வாரானேற் றன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/73&oldid=990619" இலிருந்து மீள்விக்கப்பட்டது