பக்கம்:வேளிர் வரலாறு.djvu/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. அப்போது வருணனைப் பாடியது. கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும் வருணனே மாமலையன் கோவற்- பெருமணத்து நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரது தவிர்த்துப் பொன்மாரி யாகப் பொழி.” என வருவனவற்றால் அறியலாம். இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்வீக னென்னும் அரசனுக்கு மணஞ்செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாரது அறிவின் மாட்சியாலும் தெய்வத்தன்மை யாலும் சிறப்பு நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஒளவையார் மூவேந் தரையும் இம் மணத்திற்கு 'உட்காது' 'நகாது' 'செய்யத் தகா தென்று தேம்பாது' வருக என்றழைத்தமையால், பாரிகுடிக்கும் அவ் வேந்தர்க்கும் உண்டாகிய பழையசெற்றம்போக்கி வருக என்றன ரென்பதும், பிறவும் ஆராய்ந்தறியப்படும். மேற்குறித்த பாடலுள் பாரி மகள் - அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான் ” என்பது, முன் அரசர் சிலர் இம்மகளிரைக்கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இனி, வேள் பாரியின் மகளிர் இருவரும், புலவர் பெருமானாகிய கபிலர்பாற் பயின்றுவந்ததற் கேற்ப நல்லிசைப்புலமையே யன்றி, வரையா வள்ளியோனாகிய பாரிமகளிர் என்றதற்கேற்ற வள்ளற்றன் மையும் உடையராயிருந்தனரென்பது, மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு-நீருலையுட் பொன்றந்து கொண்டு புகாவாக* நல்கினாள் ஒன்றுறா முன்றிலோ வில்.” என்னும் பழமொழிச் செய்யுளாலும் (க-க) "மாரியென்ப தொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர், இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்

  • புகா - உணவு. "புகாக்காலைப் புக்கெதிர்ப்பட்டுழி” என்றார் தொல்காப்பியரும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/75&oldid=990617" இலிருந்து மீள்விக்கப்பட்டது