பக்கம்:வேளிர் வரலாறு.djvu/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. சுக வீடுபேறு கருதி அக்கினியிற் பிராயோபவேசஞ்செய்தனர் எனவும்,* அப் புலவர் அங்ஙனம் அக்கினிப் பிரவேசஞ்செய்த கல்லையுடையது வீரட்டானங்களில் அநாதியாகிய திருக்கோவலூர் எனவும் கூறப் பட்டிருத்தல் காணத்தக்கது. இச் சாஸனத்தால், பாரிமகளிர் பார்ப் பார்க்கு மணஞ்செய்யப்பட்டவர் அல்லரென்பதும், திருக்கோவலூரை ஆண்ட மலையமானுக்கே அவர் மணம் புரிவிக்கப்பட்டனரென்பதும் வெள்ளிடைமலைபோல் விளங்குவன அன்றோ. ஆயின், ஐயங்கா ரவர்கள் எழுதியவாறு, பாரி மகளிர் திருமணம் ஒளவையாரால் நிகழ்த்தப்பட்டதென்று காணப்படாமல், கபிலரால் நிகழ்த்தப்பெற்ற தாக இச்சாஸனத்துக் காணப்படுகின்றது. இதனால், பாரி மகளிர் இருவருள்ளே மூத்தவளை மலையற்கு மணம்புரிவித்து இளையவளைக் கபிலர் தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்து வடக்கிருக்க, அவ் விளையவளைத் தெய்வீகன் என்னும் மலையமா னுக்கு ஒளவையார் பின்புமணம்புரிவித்தனர் என்று கொள்ளுதல் பொருந்துவதாம். பாரிமகளிர் மணத்தைப்பற்றி ஒளவையார் சேர னுக்கு விடுத்த பாடலில் "பாரிமகள் - அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்”+ என அவ்விருவர் மணமுங் கூறாது ஒருத்திசெய் தியே கூறப்பட்டிருத்தலும், மேலே குறித்த சாஸனப்பகுதியில் "பாரி தன் னடைக்கலப்-பெண்ணை மலையற்குதவி” என அவ்வாறு ஒருத்தி மணமே கபிலர் நிகழ்த்தியதாகக் கூறப்படுதலும், பாரி மகளிரிருவர் மணமும் ஒருவரால் நிகழ்த்தப்பட்டதில்லை என்னும் ஊகத்துக்குத் தக்க சான்றாகின்றன. தமிழ் காவலர் சரிதைக் குறிப்பினும் சாஸனத் துக்கண்ட செய்தியே மதிப்புக்குரியதாதலால், அங்கவை சங்கவை யிருவர் மணமும் ஒளவையாரால் நிகழ்த்தப்பட்டதாக ஷை சரி தைக்குறிப்புக் கூறுவதில், அவ்விருவருள் இளையவள் மணமே அப் பெண் புலவரால் நடத்தப்பட்டதென்று --மேற்குறித்த சாஸனத்துக் கேற்பக்கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகத் தோற்களின் றது.

  • இதனால், கபிலர் வடக்கிருந்தனரென்ற புறநானூற்றச்செய்

யிற் பிராயோபவேசஞ் செய்ததைக் குறித்ததாகக் கொள்ளத்தக்கது.

  • இப் பாடல், பிற்காலத்துத் திரிந்து வழங்கப்பட்டுவாயில் என்னை

சங்கவை யிருவர்மணமும் ஒளவையார் நடத்தியதாகவே கூறப்பட்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/77&oldid=990633" இலிருந்து மீள்விக்கப்பட்டது