பக்கம்:வேளிர் வரலாறு.djvu/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு2 வேளிர் வரலாறு. இங்ஙனம், பாரிமகளிரது மண நிகழ்ச்சி பழைய பாடல்களிலும் சாஸனத்திலும் தெளிவாகக் கூறப்பட்டிருக்க, அம் மகளிர், சிங்கள தேசத்தரசனாய் வேற்றுவேந்தனால் தன்னாடுகவரப்பட்டுச் சேரனாடு புகுந்திருந்த பாரிசாலனென்பான் மகளிர் எனப் பிறசில வேறுபாடுக ளுடன் பின்னூல்களில் வழங்கப்பட்டுள்ளது ; இதனை அடியில்வரும் அண்ணாமலைச்சதகச் செய்யுளிற் காண்க. "சிங்கள மெனுந்தேய முழுதாளு மன்னவன் சிறந்த பேர் பாரி சாலன் செய்மெய்த் தவத்தா லுதித்துநற் குணமேவு சிறுமியங் கவை சங்கவை மங்கையோ ரிருவரை வளர்த்தெடுத் தௌவையார் மாமுகக் கணபதி கையான் மணவோலை யெழுதிமும் மன்னரைக் கோவலூர் வரவழைத் தறுகிடற்கே தங்கிய பனந்துண்ட மரமாகி யேபழந் தரநதிப் பெண்ணை நெய்பால் தான்வாப் பாடியப் பெண்களைத் தெய்விகத் தலைவன் மணம்பு ணரவே . யங்குதவு மௌவைதொழு மைங்கரன் தந்தையே யருள்பெறு வசந்த ராயர் அண்ணாவி னிற்றுதிசெய் யுண்ணா முலைக்குரிய அண்ணா மலைத்தேவனே” இங்ஙனம், தென்னாட்டில் ஆட்சிபுரிந்த சிற்றரசன் ஒருவனை இன்னுந் தெற்கேயுள்ள சிங்கள நாட்டவனென்று வடக்கணுள்ளோர் கொண்டதும், பிற மாறுபாடும் நம் நாட்டுக்குப் புதியனவல்ல. உண்மைக் கதைகள் பிற்காலத்தில் மாறி வழங்குவன இதுபோற் பலவாம். மேற்கூறியவற்றால் வேள் பாரியின் வரலாறு ஒருவாறு உணரத்தக்கது. இனி, பாரியுடைய நாடும் மலையும் யாண்டையன? என்பது ஆராயற்பாலது. பாண்டிமண்டல சதகத்தில்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/78&oldid=990634" இலிருந்து மீள்விக்கப்பட்டது