பக்கம்:வேளிர் வரலாறு.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு வேளிர் வரலாறு. என்னும் பெயர் வழக்கின் காரணமும் இதுவேயாதல்வேண்டும். இவ் வெழு மலைகளிலே-பாழிச்சிலம்பு (அகம்-கரு உ.) நவிரம்(மலைபடு - ரு எக) என்ற இரண்டே இப்போது தெரிவன. நன்னனாட்டில், பாழி (அகம்-உஅ, உருஅ, ஙஎரு) பாரம் (ஷை கருஉ) பிரம்பு (ஷை - ஙருசு) வியலூர் (ஷை -கள்) என்ற ஊர்களும், சேயாறு (மலைபடு - சஎச) என்னும் நதியும் இருந்தனவென்பது முன்னூல்களால் அறியப்படு கிறது. இவனது பாழிச்சிலம்பிற் பழையவேளிரால் மிகுக்கப்பட்ட பொற்குவியல் பெரிதும் உண்டென்பர் பரணர். (உருது) இவனாண்ட பல்குன்றக்கோட்டநாடு, இப்போது வட ஆர்க்காடு, தென்னார்க்காடு 'ஜில்லா'க்களில் அடங்கியுள்ளதாகும்.* நன்னனது நவிரமென்னும் மலைமேல் 'காரியுண்டிக் கடவுள்' எனப்பெற்ற சிவபிரான் கோயி லொன்றுண்டு என்பர். (மலைபடு - அச) அகநானூற்றிற் பாடுநர் செலினே - அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை - சூழாது சுரக்கும் நன்னன்” (ந.சசு) இசைநல் லீகைக் களிறுவீசு வண் மகிழ்ப் - பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" (கரு) என இவன் புக ழப்ப்டுதலோடு, மலைபடுகடாத்தில் அடியில் வருமாறும் சிறப்பிக்கப் படுகின்றான். வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப் பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப் புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க் கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு தூத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையும் நல்லோர் குழீஇய நாநவி லவயத்து வல்லாா யினும்புற மறைத்துச்சென் றோரைச்

  • புறநானூற்றுப் பதிப்பிறுதியிலுள்ள ஸ்ரீ வெங்கையர் அவர்கள் குறிப்

புப் பார்க்க. + இஃது அண்ணாமலைபோலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/82&oldid=990638" இலிருந்து மீள்விக்கப்பட்டது