பக்கம்:வேளிர் வரலாறு.djvu/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். சுள். சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லி தி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமும் பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரும் ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் கேளினி வேளை நீ முன்னிய திசையே.” எனக் காண்க. மதுரைக்காஞ்சியில், மதுரையில் நிகழும் பலவகை உவகை ஆரவாரங்களைப்பற்றிக் கூறும்போது, மாங்குடி மருதனார் என்ற புலவர், பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்-சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு” .(அடி-சுக0, சு கக.) என்று உவமிக்கின்றார்; இதனாற் செங்கண்மாவில் நன்னன் வேண்மானது பிறந்தநாட்கொண் டாட்டம் தமிழகமெங்கும் புகழத்தக்க சிறப்புடன் நடைபெற்று வந்தமை விளங்கும். இக் கொண்டாட்டநாள் 'நன்னனாள்' என்ற பெயர்பெற்றது என்பர் நச்சினார்க்கினியர். (பத்துப்-பக்-உ.உரு) இந் நன்னன், சேரமானது படைத்தலைமை வகிக்கும் கௌரவமும் பெற் றிருந்தான். (சச-ம் அகப்பாட்டுரை) நன்ன னு தியன் அருங்கடிப் பாழி” (அகம்-உருது) என வருதலால், சேரனைச் சார்ந்திருந்தமை பற்றி உதியன் என்ற பெயரும் இவனுக்கு வழங்கியது போலும்.* இந் நன்னனுக்கு 'வானவிறல்வேள்'+ என்ற சிறப்புப்பெயரொன்றும் மலைபடுகடாத்திற் கூறப்பட்டுள்ளது. (அடி -கசரு) இத்தொடர்மொழி யே மதுரைக்காஞ்சியில் அழும்பில்வேள் என்பானுக்கும் வழங்குவ தாம். (அடி - ஙச ச-ரு) இவ் வேளும் சேரமானது கருமத்தலைவரில் ஒருவனாவன். (சிலப்-உ.அ.உமரு) இவ்வாறு சேரரது அரசியலில் தலைமை வகித்த சிலர்க்கு 'வான விறல்வேள்' என்னும் சிறப்புப் பெயர் வழங்குதலை நோக்கும்போது, அது, 'வானவனது வெற்றிக் குரியவேள் ' என்ற பொருளில் வந்த தொடராதல் வேண்டும் என்று கருத இடந்தருகின்றது. (வானவன் -சேரன்) இவ்வாறாயின், வான வன் விறல் வேள் என்பது வானவிறல்வேள் என்று மருவியதாகல் வேண்டும். இனி, இந்நன்னன்வேண் மான் பிண்டன் என்பானோடு

  • அரசரைச் சார்ந்த படைத்தலைவர் முதலியோர் அவ்வரசர்பெயரே புனை

தல் முன்னை வழக்கு.

  • இது மானவிறல்வேள் எனத் திரிந்தும் வழங்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/83&oldid=990640" இலிருந்து மீள்விக்கப்பட்டது