பக்கம்:வேளிர் வரலாறு.djvu/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவு வேளிர் வரலாறு. பொருத பெரும்போரொன்றில் வெற்றிபெற்றவன் என்று புகழப் பட்டுள்ளான். (அகம்-கருவி) இனி, நன்னன் வேண்மானுடைய தந்தையாகிய நன்னன் கொ டுங்கோலனென்றும் கல்வியருமை அறியாதவனென்றும் அதுபற் றிப் புலவர்களை வெறுத்துவந்தவனென்றுந் தெரிகின்றன. இவனது கொடுங்கோன்மையைக் காட்டுங் கதையொன்றும் பரணர் என்னும் பழைய புலவராற் குறிக்கப்பட்டுள்ளது. இந்நன்னனது சோலையிலே இவன் தின்றுமகிழ்தற்கென்றே வைத்து வளர்க்கப்பட்ட ஒரு மரத் தின் இனிய காயொன்று அச்சோலைப்பக்கத்தோடும் ஆற்றில் வீழ் ந்து அயலதாகிய துறையில் ஒதுங்க, ஆங்குக் குளித்தற்பொருட்டு வந்த சிறுமியொருத்தி அங்ஙனமொ துங்கிய காயை அறியாதெடுத் துத் தின்றனர். இச்செய்தியைச் சோலை காவலரால் அறிந்த இந் நன்னன் பெருஞ்சினங் கொண்டவனாய்த், தான் தின்னுதற்குரிய காயை அப்பெண்ணெடுத்துத் தின்றுவிட்டதின் பொருட்டு, அவளைக் கொலை புரிந்துவிடும்.டி கட்டளையிட்டனன். இச்செய்தி யறிந்த அப் பெண்ணின் தந்தை, தன் அருமை மகளுக்கு அறியாமையால் நேர்ந்த விபத்தையெண்ணிக் கலங்கி, நன்னனிடம் நேரிற்சென்று அரசே! என்மகள் தமக்குரிய காயென அறிந்துவைத்து அதனைத் தின்றவ ளல்லள்; அறியாது செய்த இப்பிழையைப் பொருத்தருளல் வேண் டும். அவள் புரிந்த இத்தவற்றுக்காக, எண்பத்தொரு யானைகளும் அவள் நிறையளவு பொன்னாற்செய்த பாவையொன்றும் யான் ஈடு தர வல்லேன் ; அவட்கு விதித்த இக்கொலைத்தண்டனையைமட்டும் நீக்கி யருள்க” எனப் பலவாறாக மன்றாடினன். எவ்வளவு மன்றாடியும் என்? அக்கொடுங்கோல் நன்னன், அறத்தை நோக்கானாய் உள்ளீரஞ் சிறிதுமில்லானாய் அச்சிறு பெண்ணைக் கொலை புரிந்தே தன் சினந் தீர்ந்தனன்” என்பதாம். இகனை- மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீயரோ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/84&oldid=990641" இலிருந்து மீள்விக்கப்பட்டது