பக்கம்:வேளிர் வரலாறு.djvu/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். சுக எனக் குறுந்தொகையில்வரும் பரணர் பாடலால் அறிக. (உகூஉ) நன்னனுடைய கொடுங்கோலும் அறிவீனமும் இத்தன்மையன என் பது, சங்கநாளில் வழங்கிய இச்சரிதையால் நன்கு விளங்குகின்றது. பண்டும் பண்டும் பாடுந ருவப்ப” என்ற புறப்பாட்டில் அதனுரை காரரும் இக்கதையைக் குறித்துள்ளார். "அறிவார் யார், கல்லாள் பிறக்குங் குடி” என்றவாறு, இக்கொடியோனுக்கு நற்குணமே திர. ண்ட நன்னன் - வேண்மான் பிறந்தனன். பண்டைக்கால வழக்கப் படி தந்தைபெயரையும் உடனிணைத்து நன்னன்சேய் நன்னன்" என இவ்வேண்மானை முன்னோர் வழங்கினராயினும், அத் தீயதந்தை பெயரை விலக்கியொழியாது இவனுடன் இணைத்தது, கள்ளி வயி ற்றி னகில் பிறக்கும்” என்னும் முதுமொழியை உலகோர்க்கு மெய்ப் பித்தற்குப் போலும். இங்ஙனம் உலகங்கூறும் பழிச்சொற்கு இல க்காய் நின்ற நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேரவரசனுடைய நாட்டைக் கவர்ந்தாண்டு வந்தமையால், (அகம். ககூகூ) பிற்காலத்தே அச்சேரனால் தன் செற்ற நீங்க, வாகைப் பெரு ந்துறை என்றவிடத்துநடந்த பெரும்போரிற் கொல்லப்பட்டு இறந் தொழிந்தான். இவன் ஒழிந்தபின், இவன் மகனாகிய நன்னன். வேண்மான் பல்குன்றக்கோட்டத்தைத் தன் செங்கோலால் நாளும் மகிழ்விப்பானாயினன். தன் தந்தை சேரனுடன் பகைத்திறந்தனனாயி னும், இந்நன்னன் அவனுடன் நட்புக்கொண்டிருந்ததோடு முற்கூறிய வாறு அச்சேரன் படைத்தலைமையும் பூண்டனன். (இவன் தந்தை யே சோன்படைத்தலைவன் எனின், அவன் தன்னரசனுடன் போர் புரிந்தானாதல் வேண்டும். ஆயின், யஜமானத் துரோகமும் அவன் செய்தவன் ஆவான்.) இந்நன்னன் வேண்மான், தன் பந்துவோ படைத்தலைவனோ ஆகிய ஆய்-எயினன் என்பான் மிலி என்பா னோடு புரிந்த பெரும்போரில் இறந்தொழிய, அதற்காற்றாது பெருஞ் சினங்கொண்டு பகைவரை வேரோடு அழித்தானென்று உ0 அ-ம் அகப்பாட்டு அறிவிக்கின்றது. இனி, நன்னனுக்கு மகனாகிய நன்னன் பெருவள்ளலாய்ப் புல வர் புகழ்ச்சிக்கு உரியவனாக விளங்கினும், இவன் தந்தை புரிந்த தீச் செய்கைகளை இவனற்செய்கைகள் பிற்காலத்து மறைத்துவிட்டன வாகவில்லை. தந்தை நன்னன் பெண்கொலை புரிந்த பெரும் பழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/85&oldid=990642" இலிருந்து மீள்விக்கப்பட்டது