பக்கம்:வேளிர் வரலாறு.djvu/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 வேளிர் வரலாறு. மட்டும் உடையனல்லன். அவன் கல்வியருமை யறியாத கசடனுமாத லால், தன்பாற் பரிசில் பெறவேண்டிவரும் நல்லிசைப்புலவரையெல் லாம் வெறுத்து, அவர் தன்பால்வாராமல் தன் வாயிற்கதவை அடை த்து வந்தான். இஃது, அக்காலத்து விளங்கிய புலவர்களுக்கெல்லாம் பெருவியப்பும் பெருங்கோபமு மூட்டியதோடு, அவன்மேல் வசை பாடவும் அவர்களைத் தூண்டியது. நல்லிசைப்புலவராகிய ஒளவையார், ஒருகாற் பல்குன்றக்கோட்டமெனப்படும் ஏழிற்குன்றம் சென்றிருந் தபோது, இந்நன்னன் அம்மூதாட்டியின் அருமை பெருமைகளை அறிந்து உபசரியாது உதாசீனனாயிருக்க, அதனைப் பொறுக்கலாம் றாத அம்மெல்லியற் புலவர்- "இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்று நின் குற்றம்- மருடேயும்* பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள.” என அவனை முனிந்து பாடினர். (மகனாகிய நன்னன் புலவர் புகழ்ச் சிக்கு உரியவனாகலின், இப்பாட்டில் வரும் 'ஏழிலார்கோவே' என் பது, தந்தையாகிய நன்னனையே குறிக்கும்: அவனே ஒளவையார் காலத்துக்கு ஏற்றவனும் தீச்செயலுடையவனுமாதலால்.] தொல் காப்பியச் செய்யுளியலுரையிற் குறிப்பில்லாமலும், தமிழ் நாவலர் சரிதையில் ஒளவையார் ஒருவனைப்பாடி அவனிகழ்ச்சி சொல்ல, அப்போது பாடிய அங்கதம்” என்னுங் குறிப்புடனும் அடியில் வரும் அகவலொன்று காணப்படுகின்றது:-

  • “எம்மிக ழாதவர் தம்மிக ழாரே

எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரே எம்புக ழிகழ்வோர் தம்புக ழிகழ்வோர் பாரி யோரி நள்ளி யெழினி - ஆஅய் பேகன் பெருந்தோன் மலையனென் றெழுவரு ளொருவனு மல்லை யதனால்

  • 'மருடீர்ந்த' எனவும் பாடம்.

t தொல் - பொருளதிகாரம். பக் - சுஅசு; + தமிழ்நாவலர் சரிதை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/86&oldid=990643" இலிருந்து மீள்விக்கப்பட்டது