பக்கம்:வேளிர் வரலாறு.djvu/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எe வேளிர் வரலாறு. பெண்டிரும் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீரக்கோ னாதலின், நன்று முயங்க லான்றிசின் யானே ; பொலந்தேர் நன்னன் மருக னன்றியும், நீயும் முயங்கற் கொத்தனை மன்னே : வயங்குமொழிப் பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை யணங்குசா லடுக்கம் பொழியுநும் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே." எனவரும் புறப்பாட்டடிகளால் உணர்க. இவ் வடிகளிலே 'நன்னன் மருகனன்றியும்' என்பதில் கூறப்படும் நன்னன் என்பான் நற்குண மிக்க மகனாகிய நன்னனும், 'பாடுநர்க் கடைத்த கதவி' னையுடைய வன், தந்தையாகிய நன்னனும் ஆதல் வேண்டும். இவ்விருவர் வழி யிலும் இளவச்சிரக்கோ அல்லது இளவிச்சிக்கோ என்னும் அரசிளங் குமரன் உதித்தவன் என்பது, இப்பாட்டின் குறிப்பால் விளங்கத் தக்கது. இனி, ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடுகடாத்துவரும் 'தீயி னன்ன வொண்செங் காந்தள்' என்னும் அடியின் விசேடவுரையிலே 'இதற்கு, 'நன்னனென்னும் பெயர் தீயோடு அடுத்தமையின் ஆனந்த மாய்ப் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார்' என்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாரால் எனின்; - அவர் அறியாது கூறி னார்” என்று தொடங்கிப் பிறரொருவர்கூற்றை மறுத்துக் கூறுவர்; 'தீயினன்ன' என்ற தொடரில் ஆனந்தக்குற்றமில்லை என்பது நச்சி னார்க்கினியர் மறுப்பாயினும், நன்னனும் அவனை 'மலைபடுகடாத்) தாற் புகழ்ந்து பாடிய கௌசிகனாரும் ஒருங்கிறந்தவர்கள் என்ற பிறர் கூற்றை அவ்வுரையாளர் மறுத்திலர்; இதனால், அவ்விருவரும் ஏதோ ஒருகாரணத்தால் ஒருகாலத்தே உயிர்நீத்தவர்கள் என்பது உய்த் துணரப்படுகின்றது. இனி, நன்னனது குல வரலாற்றைக் குறித்தும் சிறிது ஆராய் வோம். இவன் வேளிர்மாபைச் சேர்ந்தவன் என்பது மேலே பெறப் பட்டது. வேளிர் எனப்பட்டவரில் பண்டைச் சாளுக்கியரும் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/88&oldid=990645" இலிருந்து மீள்விக்கப்பட்டது