பக்கம்:வேளிர் வரலாறு.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். எங என்பதை அவர் வரலாறு கூறுமிடத்து விளக்கியுள்ளேன். ஆனால், இந்நன்னன்குலத்தைச் சாளுக்கியர் மரபென்பதினும், அவரது சகோ தர வகுப்பினராகிய + கடம்பர் மரபென்றல் பொருத்தமாகத் தெரி கிறது. ஆதிசரித்திரத்தை ஆராய்வோமாயின், சளுக்கருங் கடம் பரும் ஒருகுலத்தவரென்பது நன்கு விளங்கும்; தம்மைப் பிறப்பித்த முனிவரிடத்திலிருந்து பெற்ற "ஆரீதிபுத்திரர்” என்ற குலப்பெய ரும், மானவ்ய கோத்திரமும் முருகக்கடவுளைத் தங்குலதெய்வமாகக் கொண்டமையும் சளுக்கர்க்கும் கடம்பர்க்கும் வித்தியாசமின்றியே காணப்படுவனவாம். இவருட் கடம்பர், தம்மிருக்கைக்குப் பக்கத்தே (தங்குலதெய்வமாகிய முருகக்கடவுட்குரியது பற்றிப்போலும்.)கடம் பமரமொன்றை வளர்த்து அதனைப் பெரிதும் போற்றிவந்ததனால் அப்பெயர் பெறலாயினர். இவ்வாறு கடம்பமரத்தை வளர்த்துப் போற்றிவந்த வேளிர்வகுப்பார், சங்ககாலத்தில், இந்நன்னன் வழியின ராகவே காணப்படுகின்றனர். பதிற்றுப்பத்தின் நான்காம் பத்துப் பதி கத்தில் 'உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னன் என்று கூறப்படு தல் காண்க. இதன்பொருள்:- உருட்சியாகிய பூவையுடைய கடம்ப மரத்தைத் தனது பெரிய வாயிற்கண்ணே கொண்ட நன்னன்" என்ப தாம். பதிற்றுப்பத்துரைகாரர் 'கடம்பின் பெருவாயில் - நன்னன் ஊர்' என்பர்; இதுவும் கடம்பமரத்தை வாயிலிற்கொண்ட காரணம் பற்றியே வழங்கியதாகல் உய்த்துணரப்படும். நன்னனுக்கு வாகை காவன் மரமென்று அப்பதிகத்தில் வேறு கூறப்படுதலால் (பக் - ருஅ.) இக்கடம்பு அவன் குலத்தினர் கொண்ட அடையாளமரமாகும். இவற்றால், நன்னன் வேளிருள்ளே கடம்பர் பிரிவைச் சேர்ந்தவ

  • இந் நூலின் முற்பகுதியாகிய வேளிர் வரலாறு கச-ம் பக்கங்காண்க.
  • கடம்பர் என்போர், மைசூர் ராஜ்யத்தின் மேல்பாகத்தை, - கி.பி. 3-ம்

நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை ஆட்சிபுரிந்த தனி அரசராவர்; இவர் கள் நாட்டில், வடகன்னடமும் (Haiga) தென்கன்னடமும் (South Tuluva) அடங்கியிருந்தன. இவ்வரசரது தலைநகரம், ஸாரப் (Sarab) தாலூகாவின் மேல் எல்லையில் உள்ள தும், பழமைபெற்றதுமான பனவா ஸி (Banavasi) என்பதாம். இதனை ஜயந்தி, வைஜயந்தி எனவும் வழங்குவர். பிற்காலத்தே இந்த ராஜ்யம், ஷிமோகா ஜில்லாவின் பெரும்பாகமும் அடங்க 'வனவாஸி - பன்னீராயிரம் எனக் கூறப்பட்டுள்ளது. (Mysore and Coorg from the inscriptions. pp. 21.) + Bombay Gazetteer. Vol. I; Part. II; p. 286. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/89&oldid=990646" இலிருந்து மீள்விக்கப்பட்டது