பக்கம்:வேளிர் வரலாறு.djvu/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச வேளிர் வரலாறு. னென்பது உய்த்தறியலாம்.* இனி, இக்கடம்பர்க்கும் வேளிர் என்ற சொல்வழக்கம் முன்பு வழங்கியதென்பதற்கு, நீண்டகாலம் இவ ராண்ட பிரதேசமொன்று இவர் பெயரால் "வேள் கிராமம்” என வழங்கியதே 'சான்றாகும். இப்பிரதேசம் இப்போது பேல்காம் (Belguam) எனத் திரிந்து, பம்பாய் ராஜதானியில் ஒரு 'ஜில்லா' வாக வுள்ளமை முன்னரே பிரஸ்தாபிக்கப்பட்டது. " இனி, வேளிராகிய சாளுக்கியர் மகதநாட்டு ஆந்திரரினின்று பிரிந்தவர் என்பதற்குரிய காரணங்கள் வேளிர் வரலாற்றுள் விளக் கப்பட்டன. எனவே, அச் சளுக்கரது சகோதர வகுப்பினராகிய கடம்பவேளிரும் அவ்வாந்திரவமிசத்தவரே என்பது சொல்லாதே பெறப்படும். இற்றைக்கு 1700-வருஷங்கட்கு முன்பு, கடம்பர் மர பைச் சேர்ந்த ஆரீதிபுத்ரசாதகர்ணி என்ற வேந்தனொருவன் தக்ஷி ணத்தை ஆண்டனன் என்பது பழைய சாஸனமொன்றால் தெரிகிறது; அவ்வரசன் பெயருள் முற்பகுதி அவனது இயற்பெயரென்றும், பிற் பகுதியாகய சாதகர்ணி என்பது, அவன் குலப்பெயரா மென்றும் ஆகவே, அக்கடம்பவேந்தன் ஆந்திரரோடு தொடர்புடையவனாதல் வேண்டுமென்றும் தக்க காரணங்களுடன் சரித்திர நூலோர் கூறு வர். (சாதகர்ணி - ஆந்திரபிருத்திய அரசர் சிலர்க்கு வழங்கிய டெய யர்.) எனவே, சளுக்கரைப்போலவே, கடம்பரும் ஆதியில் ஆந்திரரி னின்று பிரிந்த வகுப்பாரென்பது வலிபெறுவது கண்டுகொள்க. நன்னன் குலத்தவர், மேற்குறித்தவாறு ஆந்திர வமிசத்தவரே என்பதற்கு, வேறுசில சான்றுகளும் காட்டலாம். நன்னன் வழியில் வந்த இளைஞனொருவன் இளவச்சிரக்கோ என்னும் பெயருடையான் என்பது புறநானூற்றால் அறியப்படும். இளவச்சிரக்கோ என்பது இளவிச்சிக்கோ எனத் திரித்தும் வழங்கப்படுகிறது. இவ் விளைஞன்

  • நெடுஞ்சேரலாதனைக் 'கடற் கடம்பறுத்தான்' என்று நூல்கள் கூறு

வது, இவ்வரசரது காவன்மரமாகிய கடம்பை வெட்டி வென்றதையே என்று கருதப்படுகிறது. (பதிற்றுப் - உ-ம் பத்து.) + Bombay (fazetteer. Vol. I; Part. IT; p. 568-570. 1 Tbid. 1). 278, 279. புறநானூறு. கருக -ம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/90&oldid=990647" இலிருந்து மீள்விக்கப்பட்டது