பக்கம்:வேளிர் வரலாறு.djvu/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். எரு பெயர்கொண்டு இவன் முன்னோர் வச்சிரக்கோ, அல்லது விச்சிக்கோ என்றழைக்கப்பட்டனர் என்பது பெறலாகின்றது. இவ்வாறே, நன்னன்வழியினனொருவன் "வில்கெழு தானை விச்சியர் பெருமகன்” எனக் குறுந்தொகையிற் (கஉஅ) கூறப்படுதலுங் காண்க. வச்சிரக் கோ என்பதற்கு வச்சிரநாட்டரசன் என்பது பொருளாம். வச்சிர நாடு என்பதொன்று தமிழகத்தே முற்காலத்து வழங்கியதாக இப் போது தெரிந்திலது; ஆதலின், இப்பெயர், நன்னன்வழியினர்க்கு அவர் ஆதிதேசத்தைப்பற்றியே வழங்கியதாகல் வேண்டும். மா நீர் வேலி வச்சிரநன்னாட்டுக் கோன்” என்னுஞ் சிலப்பதிகார அடியின் விசேடவுரையிலே, அடியார்க்கு நல்லார், வச்சிரநாடு - சோணைந்திக் கரையிலுள்ள (Son)* தேயமெனக் குறிப்பிடுகின்றனர். (பக்-கங்க) அஃதாவது - ஆந்திரசக்கரவர்த்திகள் ஆட்சிபுரிந்த மகததேசத்தின் தென் பகுதியாம். இக்காலைச் சரித்திர நூல்களில், வச்சிரதேசமென ஒன்று தனித்து வழங்கப்பட்டிலதேனும், முற்காலத்தே அது மகத நாட்டின் பிரிவுகளில் ஒன்றாக அடங்கியிருந்ததென்று தெரிகின்றது. இவ்வாறு, நன்னன் குலத்தவர் ஆந்திரர் என்பதற்கு முன்பு கூறி வந்த காரணங்களோடு பொருந்த, அவ்வாந்திரர்க்குரிய வச்சிரநாட் டை இந்நன்னன் வழியினர்க்கும் வழங்கயிருத்தல் இங்கே சிந்திக் கத்தக்கது. நன்னது பல்குன்றக் கோட்டத்துக்கே 'வச்சிரநாடு' அல்லது 'விச்சிநாடு' என்னும் பெயரு முண்டென்று பின்னாராய்ச்சி யால் விளங்கினும், அதுவும், அவன் முன்னோரது குலதேசம் பற்றியே வழங்கியதாகல் வேண்டுமென்று கருதத்தக்கது. அன்றியும், நன்னன் நாடாகிய நடுநாட்டுக்கு மகதநாடு என்ற பெயர் முன்னாளில் வழங்கி வந்ததென்பது சாஸனங்களாலும் பாடல்களாலும் நன்கறிந்தது. + இதுவும் நன்னன்குலத்தோர் தம் பூர்வதேசத்தை அபிமானித்து வழங்கியதேயாம். சுருங்கச் சொல்லுமிடத்து, வேளிர்” என்று தமிழ் நூல்களிற் கூறப்பட்டோர், பழையகாலத்தே, மகத நாடாண்ட ஆந்திரரினின்று பிரிந்துவந்து தென்னாடாண்ட சிற்றரசர் என்பதே முடிபென்னும்படி பழைய நூல்களும் பிறவுங் குறிப்பிக்கின்றன எனலாம்.

  • இச் சோணை நதியின் வரலாறு வான்மீகத்திற் காணப்படும் ; இது,

வடக்கே பண்டில் கண்டு என்ற நகரத்தையடுத்து உற்பத்தியாகி, பாடலீபுரத் தருகே கங்கையிற் சங்கமமாகும் ஓர் உபநதியாகும். + “செந்தமிழ்” தொகுதி-உ ; பக்-உச.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/91&oldid=990648" இலிருந்து மீள்விக்கப்பட்டது