பக்கம்:வைணமும் தமிழும்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

103


டிருந்த வைணவர் ஒருவரால் அருமையாக வளர்க்கப் பெற்று வந்த 'குமுதவல்லி' என்ற பெண்மணியை ஒரு சில நிபந்தனைகளின்படி திருமணம்புரிந்து கொண்டு தாமும் பரமபாகவதராகி அவளுடன் திருமாலடியார்களை ஆராதிப்பதில் செல்வங்களையெல்லாம் செலவிட்டார். அரசிறையாகத் தம்மிடமிருந்த பொருளும் இச்செலவில் கரைந்தது. நாளடைவில் இவருடைய இச்செயல் வெளிப்பட அரசன் இவரது சிற்றரசு உரிமையையும் பறித்துக் கொண்டதுடன் இவரையும் சிறையிலிட்டனன். பின்னர் திருமாலின்அருளால் கச்சியில் பெரும்பொருள் பெற்று அரசனுக்குரிய கடனைத் தீர்த்துச் சிறையினின்று விடுதலை பெற்றார்.

திருமால் கைங்கரியம் புரிவதற்குக் கையிலே வேறு 'பொருளின்மையால், 'நீர்மேல்நடப்பான்', 'நிழலில்ஒதுங்குவான்', 'தாள்ஊதுவான்', 'தோலாவழக்கன்' ஆகிய நால்வரின் துணை கொண்டு ஆறலைத்துப் பொருளிட்டி அப்பொருளைக் கொண்டு அன்பர்கட்கு அமுது செய்வித்து வரலாயினர். ஒருநாள் தம்பதிக்கு (திருநகரிக்கு) அடுத்த திருமணங்கொல்லை என்ற ஊர்ப்புறத்தில் ஒர் அரசமரத்தில் பதுங்கியிருந்தபொழுது ‘வயலாளி மணவாளன்' அந்தண இளைஞர் வடிவத்துடன் மணவாளக் கோலத்துடன் புதுமணம் புணர்ந்த தம்மனைவியுடன் எல்லாவிதப் பொன் அணிகளைப் புனைந்து கொண்டு பரிவாரம் சூழ வந்து கொண்டு இருந்தார். கலியன் தம் கூட்டத்துடன் அவர்கள்மேல் விழுந்து பொன் அணிகளையெல்லாம் களையச் செய்தார். அவற்றையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி தூக்கிச் செல்ல முயன்றபோது தூக்க இயலாமல் மந்திரம் பண்ணினைபோலும்’ என்று தம்