பக்கம்:வைணமும் தமிழும்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

147


பஞ்சசம்ஸ்காரம்[1] செய்தவர். இவர் மாறனேர் நம்பிக்கும் பணி விடைகள் செய்து பிரம்ம மேத சமஸ்காரம் பண்ணினார். அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான கந்தாடையண்ணன் முதலானவர்கள் மாறனேர் நம்பிக்கு பிரம்மசமஸ்காரம் செய்ததற்குப் பெரிய நம்பிகளைச் சமூகத்தினின்றும் நீக்கி வைத்தனர். பெருமாள் திருத்தேரில் அணி வீதியில் எழுந்தருளினபோது தேர்நின்றது. “பெரிய நம்பிகளை உனது திருத்தோளின்மேல் எழுந்தருளப் பண்ணி வாரும்” என்று கந்தாடை அண்ணனுக்கு பெருமாள் அர்ச்சகர் மூலமாக அருளிச் செய்ய, அப்படி அநுட்டித்துக் காட்டியபின்தான் திருத்தேர் நகர்ந்ததாம்.

9. இராமாநுசர் : (கி.பி. 1017-1137); சேஷாம்சம். திருப்பெரும்புதுரரில் கேசவ தீட்சிதருக்கும் காந்திமதி அம்மைக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரை-திருவாதிரை குடிஆசூரிகுலம். இவரை பகவதாம்சம், இலக்குமி அம்சம், சேனை முதலியார் அம்சம், பஞ்சாயுத அம்சம் என்றும் சொல்வர். வேறு திருநாமங்கள் 'இளையாழ்வார், உடையவர், யதிராசர், இலட்சுமணமுனி, சடகோபன், பொன்னடி, கோயிலண்ணன், பாஷ்யக்காரர், எம்பெருமானார், பூதபுரீசர், தேசிகேந்திரர், திருப்பாவை ஜீயர்' என்பன. திருத்தமக்கையார் நாச்சியாரம்மாள் தேவிகள், தஞ்சமாம்பாள் திருவேங்கடமுடையானுக்கு இலட்சத்தலத்தில் அலர்மேல்


  1. ஐந்து அங்கங்கள் : (1) சங்கமும் சக்கரமுமாகிய இவற்றின் இலச்சினையைத் தோளில் தரித்தல் (2) நெற்றியில் திருமண காப்பு தரித்தல் (3) தாஸ்ய நாமம் தரித்தல். (4) திருமந்திரத்தை உபதேசித்தல் (5) திருமகள் நாதனை ஆராதித்தல் என்பவை.