பக்கம்:வைணமும் தமிழும்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வைணவமும் தமிழும்


ஆன்மா பற்றிய கருத்துகளை ஒருவாறு தொகுத்து திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் இவ்வாறு கூறுவர் :

          மாத வங்களென் றோத வங்களின்
              மருவு சிவனென் றொருவ! நீபெரும்
          பூத மல்லை; யிந்திரிய மல்லை:ஐம்
              புலனும் அல்லைநற்; புந்தி யல்லைகாண்;
          சீத ரன்பரந் தாமன் வாமனன்
              திருவ ரங்கனுக் கடிமை; நீயுனக்
          கேது மில்லை யென்றறி யறிந்தபின்
              ஈதின் மாதவம் இல்லை எங்குமே.”

[1]

இதில் தம் மனத்திற்குத் தாமே உபதேசிக்கும் முகத்தால் சீவன்மாவின் சொரூபம் இத்தன்மையது என விளக்குகின்றார் அய்யங்கார்.

சித்தின் வகை : சித்து எனப்படும் ஆன்மாவின் தொகுதியில் எண்ணற்ற சீவான்மாக்கள் உள்ளனர். இவர்களின் தொகுதி பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), முத்தர்’, நித்தியர் என்று மூவகைப்படுவர். இவர்களுள் ‘பத்தர்’ என்பவர் “மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய, காலமும் கணக்கும் நீத்த காரணனான”[2] பகவானின் மாயையில் மறைக்கப் பெற்ற சொரூபத்தையுடையவர்கள்; அநாதி அஞ்ஞானத்தால் நேடிய புண்ணிய பாவமாகிய வினைகளால் குழப்பெற்றவர்கள் அவரவர்களுடைய வினைக்குத் தக்கபடி மாறிமாறித் தேவ, மனித, விலங்கு, தாவர வடிவங்களைப் பெற்று



  1. 5. திருவரங். கலம். 63
  2. 6. கம்ப. சுந்தர-பிணிவிட்டு, 80