பக்கம்:வைணமும் தமிழும்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

187


துக்கபரம்பரைகளை அநுபவிக்கும் சம்சாரிகளாவர். “முத்தர்” என்பவர் இவ்வுலகத்தளைகள் கழிந்து பரமபதத்தில் பகவதநுபவ கைங்கரிய போகரானவர்கள். நித்தியர் என்பவர், ஒருநாளும் சம்சார சம்பந்த உறவு இல்லாத அனந்தன் (ஆதிசேடன்) சேனைமுதலியார் (விஷ்வக்சேனர்), பெரிய திருவடி(கருடன்) தொடக்கமானவர்கள். இவர்களை வேதாந்த தேசிகர்,

        பல்வினை வன்கயிற் றால்பந்த
            முற்றுழல் கின்றனரும்
        நல்வினை மூட்டிய நாரண
            னார்பதம் பெற்றவரும்
        தொல்வினை என்றுமில் லாச்சோதி
            வானவ ருஞ்சுருதி
        செல்வினை யோர்ந்தவர் சீவரென்
            றோதச் சிறந்தனமே7

என்று எடுத்துக்காட்டுவர் “கர்மங்களால் கட்டுப்பட்டவர் பத்தர், எமபெருமான் சந்நிதியை (பரமபதத்தை) அடைந் தவர்கள் முத்தர் அநாதியான கர்மபந்தம் இல்லாதவர்கள் நித்தியசூரிகள்” என்கின்றார்.

2. அசித்து :

'அசித்து' என்பது அறிவில்லாத பொருள். அசித்தினால் கிடைக்கக்கூடிய பொருள்களை அதுபவிப்பவர்கள் சீவான் மாக்களே. அசித்து விகாரத்திற்கு இடமானது. ஒருபொருள் ஒரு நிலையினின்றுப் பிறிதொரு நிலையை அடைவதுதான் விகாரம் என்பது. அஃதாவது, அசித்து முன்னைய நிலையை


7. தே. பி. 26


7. தே. பி. 26