பக்கம்:வைணமும் தமிழும்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வைணவமும் தமிழும்


உரியவனாகச் சொல்லப்பெறும் எம்பெருமான் அருகிலில் லாமல் தொலைவிலிருப்பினும் அவனைப்பற்றிக் கூறும் இத் திருநாமம் அருகிலிருந்து தன்னைப் பக்தியுடன் சொன்னவர் களுடையவிருப்பங்களை நிறைவேற்றும்.திரெளபதி "கோவிந்தா!" என்று கூறியதும் அவளுடைய புடவை சுரந்ததல்லவா?

இம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமின்றிச் சொன்னாலும், தம் குழந்தைகட்கு இப்பெயரையிட்டு அழைத்தாலும், பரிகாசமாகவோ, இழிவாகவோ பொரு ளுணர்ச்சியின்றிச் சொன்னாலும் காக்கும் செயலினின்றும் தவறாது. திருமங்கையாழ்வார் இத்திருநாமத்தின் பெருமையை - மகிமையை - “குலந்தரும் செல்வம்” (பெரிதிரு. 11:9) என்ற பாசுரத்தால் வெளியிட் டுள்ளதை நினைக்கலாம்.

(2) துவயம்: எல்லாச் சாத்திரங்களும் ஒருவனுக்குத் தேகத்தாலே பேறு கிடைக்கும் என்று ஒருமுகமாகப் பேசும். திருமந்திரம் ஆன்மாவால்தான் அப்பேறு கிட்டும் என்று கூறும். சரமசுலோகம் ஈசுவரனாலேயே அப்பேறு கிடைக்கும் என்று அறுதியிடும். ஆனால், துவய மந்திரமோ ஒருவனுக்குப்பேறு கிடைப்பது பெரியபிராட்டியாராலே என்று இயம்பும். (முமுட்சு 117) 'துவயம்' என்பதற்கு இர்ண்டு என்பது பொருள்.

ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம;!

என்பது துவயமந்திரம். இதில் இரண்டு வாக்கியங்கள் அமைந்திருத்தலின் துவயம் என்று திருநாமம் பெற்றது. இந்த இரண்டு வாக்கியங்களும் கடவல்லியில்(கடஉபநிடதம்) இரண்டிடத்திலிருந்து ஒன்று திரட்டி எம்பெருமானால்