பக்கம்:வைணமும் தமிழும்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வைணவமும் தமிழும்


தொடர்பை நன்கு உணர்ந்தவன். ஆயினும், “இவள் தாயாம் தன்மையால் வந்த வாத்சல்யத்தை மிகுதியாக உடையவள்; தந்தையாகிய எம்பெருமானைப்போல் வன்மையும் மென்மை யும் கலந்திராமல் மென்மையே வடிவு கொண்டவள்; பிறர் கண்குழிவு காணமாட்டாத தன்மையள்; தீய மனமுடையவர் களையும் மருவித் தொழும் மனமுடையவர்களாக்குகைக்குத் தக்க செயல் புரிபவள் குற்றமுடையவர்களும் கூசாமல் வந்து காலிலே விழலாம்படி இருப்பவள். ஆண்மையால் வந்த வன்மையோடே தந்தையாம் தன்மையால் வந்த நலம் செயும் தன்மையுடையவனாயும் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டுக் கொடிய தண்டனைகளை விதிக்கும் செய்கையாலே, குற்றமுடையவர்கள் முன் செல்லக் குடல்கரிக்கும்படி இருக்கும் சர்வேசுவரனைத் தக்க வழிகளாலே குற்றங்கள் அனைத்தையும் மறப்பித்துச் சேர்ப்பிக்கும் தன்மையள். இத்தகையவள் பாவமே செய்து பாவிகளான மக்கள் சர்வேசுவரனைப் பற்றுங்கால் புருஷகாரமாக வேண்டும்[1] என்பது மணவாளமாமுனிகளின் கருத்தாகும். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

      “நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே, குளிர்ந்த திரு
      வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்
      பொறுப்பது இவளுக்காக” (முமுட்சு 127)

என்று விளக்குவர். பகவான் மிகவும் அருள் நிறைந்த திருவுள்ளத்தனாய் இருப்பினும், சேதநன் செய்த அளவுகடந்த குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச்சீற்றத்தை


  1. 9. நிவச.பூஷ-7 இன் உரை (புருடோததம நாயுடு பதிப்பு).