பக்கம்:வைணமும் தமிழும்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வைணவமும் தமிழும்


(3) சரமசுலோகம் : பாரதப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்னர் கண்ணன் தேர்த்தட்டிலிருந்துகொண்டு காண்டீபனுக்கு உபதேசித்த கீதையில் 18-ஆவது இயலின் இறுதி சுலோகமாக அமைவது (கீதை-18:66)இது. சரமம் - இறுதி.

           “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
           அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
           மாசுச : !”

என்பது. இதனை வைணவப் பெருமக்கள் அப்படியே மூன்றாவது மந்திரமாக எடுத்துக்கொண்டு விட்டனர். இந்த சுலோகத்தின் பிண்டப்பொருள் : “சாத்திரங்களைப் பயின்று” சிறப்பான ஞானத்தைப் பெற்றவர்களே கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம் ஆகியவற்றைச் செவ்வனே அநுட்டிக்க முடியும். மற்றவர்கள் 'இவற்றை நம்மால் அநுட்டிக்க முடியாது' என்று நினைத்துத் தாம் விலக்கநேரும் ஆதலின் சிறந்த அவ்வுபாயங்களை அநுட்டிக்கக்கடவர். “அதற்கு ஆற்றல் அற்றவர்கள் என்னைச் சரண் அடைந்தால் நான் அந்தந்த அரிய உபாயங்களின் இடத்தில் நின்று அவ்வற்றின் பலனைக் கொடுப்பேன்” என்பது.

இந்த மந்திரத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியத்தில் ஸர்வதர்மாந்+பரித்யஜ்ய+மாம்+ ஏகம்+சரணம்:வ்ரஜ என்ற ஆறு பதங்களும், இரண்டாம் வாக்கியத்தில் அஹம் +த்வா+ஸ்ர்வபாபேப்யோ-மோக்ஷயிஷ்யாமி + மாசுச: என்னும் ஐந்து பதங்களும் இரண்டு வாக்கியங்களிலும் முப்பத்திரண்டு எழுத்துகளும் உள்ளன.

துவயத்துக்கும் சரமசுலோகத்துக்கும் உள்ள தொடர்பு: (1)துவயத்தின் முன்வாக்கியம் எம்பெருமானை உபாயமாகப்