பக்கம்:வைணமும் தமிழும்.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

279


என்று, வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கரவர்த்தித் திருமகளைச் சரணம் புகுதலேயாகும் என்ற குறிப்பினை இப்பாசுரத்தில் கண்டு தெளியலாம்.

திருமங்கையாழ்வார் நைமிசாரண்யத்து எம்பெருமான் திருவடிக் கமலங்களில் சரண்புகுவதைப் பாசுரங்கள் தோறும் ஒரு முறைக்கு ஒன்பதுமுறையாக ‘திருவடிஅடைந்தேன்’ என்று சொல்லுவதைக் காண்கின்றோம். பிராட்டியை முன்னிட்டுச் சரணாகதி செய்வது சொரூபமாகையால் இவரும்,

          தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!
          - - - - - - - - - - - - - - - - - - - - - - -
          நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்

- பெரி திரு.1.6;9

என்று பெரிய பிராட்டியார் சம்பந்தத்தை முன்னிட்டுப் பிரபத்தி செய்வதைக் காணலாம். இந்த ஆழ்வார்,

          கூறாஜவர் வந்து குமைக்கக்
              குடிவிட் டவரை
          தேறா துன்னஅடைந் தேன்திரு
              விண்ணகர் மேயவனே! - பெரி. திரு.6.2;7


    [கூறா-பாகமாக, ஐவர் ஐம்புலன்கள்; குமைக்க இம்சிக்க;
    குடிவிட்டவர்- இந்திரியங்கள்; தேறாது நம்பாமல்]

என்று திருவிண்ணநகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுவதைக் காணலாம். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன.