பக்கம்:வைணமும் தமிழும்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

285


இன்பத்து அழிவில்வீடு’ என்று எழுதிச் செல்வர். வைணவ சமயம் கூறும் வீடுபற்றிய கருத்து தமிழகத்தின் பழங் கொள்கையேயாகும். திருவள்ளுவரும்,

          மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
          நிலமிசை நீடுவாழ் வார். (3)

என்ற குறளில் வீட்டை (மோட்சத்தை) நிலம் என்றார்.இதனால் வீடு (மோட்சம்) ஒர் உலகம் என்பது, திருவள்ளுவர் கருத்து என்பது தெளிவு. இக்கருத்தினையே அவர் “வரன் என்னும் வைப்பு" (24) எல்லா உலகத்திலும் மேம்பட்ட வீட்டுலகம், 'வானோர்க்கு உயர்ந்த உலகம்' (346) - தேவர்களாலும் அடைய முடியாத வீட்டுலகம்: “வானம்"(353) வீட்டுலகம் என்று மேலும் விளக்குவர்.இறுதியில் கூறப்பெற்ற வானம் தத்துவ ஞானம் பெற்றவர் அடையும் இடமாகக் குறிப்பிடப்பெற்ற 7. இங்கு வானம்’ விட்டுலகத்தைக் குறித்து தத்துவ ஞானம் பெற்றவர்கட்கு இவ்வுலகத்தைவிட வீட்டுலகம் அண்மையில் இருப்பதாகத் தோன்றும். இதனையே நம்மாழ்வாரும்,

          பொன்னுலகு ஆளிரோ?
              புவனிமுழுது ஆளிரோ (6.8:1)

என்ற திருவாய்மொழியில் இக் குறிப்பினை வெளியிட் டுள்ளதைக் காணலாம். மேலும், இந்த ஆழ்வார் வீட்டினை வைகுந்தம் (1.2:11:2.5:11:4.4:11:5.10:11)என்றும், 'இலங்குவான்'


2. அறத்துப்பால்-உரைப்பாயிரம்