பக்கம்:வைணமும் தமிழும்.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

வைணவமும் தமிழும்


தொண்டு செய்து எல்லா இரகசியப் பொருள்களையும் ஐயம் திரிபறப் பெற்றவர் கிடாம்பியாச்சான், அவர் வழியாக வந்தது இவண் கூறப்பெறும் சம்பிரதாய வழி. எனவே,

          மடைப்பள்ளி வந்த மணம் எங்கள்
              வார்த்தையுள் மன்னியதே7

என்று உள்குழைந்து பணிவன்புடன் உரைப்பர்துப்புல் புலவர் திருவரங்கத்தில் எம்பெருமானாரின் திருமடைப்பள்ளியில் அடிமைத் தொழில் செய்தமையால் கிடாம்பியாச்சான் ‘மடைப்பள்ளி ஆச்சான்’ என்ற திருநாமத்தாலும் வழங்கப்பெறுவர்.

4. வைகுந்தம்: முமுட்சு நிலையை அடைந்த சிவான்மா முத்தராய்ச் சேரும் இடம் இது. இந்த இடம் ஆநந்தம் அள விறந்து ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்கு திவ்விய கற்பகச் சோலைகள், நானாவித மலர்கள் நிறைந்த பூங்காக்கள் திவ்விய இளமரக்காக்கள், திவ்விய செய்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள், பற்பல போக நிலைகள் முதலியவை நிறைந்திருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆநந்தமயமான திருமாமணி மண்டபம் ஒன்று உண்டு. இது உபயவிபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படியான : மிக்க விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவை. இங்குக் காலம் நடையாடாது; காலை மாலை, பகல், இரவு, இன்று நேற்று என்ற நிலைகள் இங்கு இல்லை. முன் பின் என்ற நிலை இங்கு உண்டு. வீடுபேறு அடைவதற்கேற்ற உபாயங்களை அநுட்டித்து அவன்


7. தே.பி. 133