பக்கம்:வைணமும் தமிழும்.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

303


பெயர் திருவரங்கத்திற்கு ஏற்பட்டதாகப் பெரியோர் பணிப்பர். அங்ஙனமே காஞ்சியைப் பெருமாள்கோயில்’ என்று வழங்குவர். இதற்குக் காரணம் திருவிருத்தத்தின் “நானிலம் வாய்க் கொண்டு’ (26) என்ற திருப்பாசுரத்தில் கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது என்ற தொடரில் வெஃகா என்பது காஞ்சியிலுள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலைக் குறிப்பதால் காஞ்சிக்குப் பெருமாள் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது: திருவேங்கடத்தைத் திருமலை என்ற பெயரால் வழங்குவர். இதற்குச் சான்று திருவிருத்தத்தில் இசைமின்கள் தூது (31) என்ற திருப்பாசுரத்தில் ‘திசைமின் மிளிரும் திருவேங்கடத்து என்ற தொடரில் திருவேங்கடம் வருவதால் திருவேங்கடம் ‘திருமலை என்ற பெயரால் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

திருவரங்கத்து அழகிய மணவாளன் இராமாயணக் கூறுடையவன் (தோலாததனிவீரன் தொழுத கோயில்) என்றும், திருவேங்கடத்துத் திருவாழ்மார்பன் (சீநிவாசன்) கண்ணன் அவதாரக் கூறுடையவன் (கண்ணன் அடியிணைக் காட்டும் வெற்பு) என்றும், அத்திகிரி அருளாளன் இந்த இரண்டு அவதாரக் கூறுகளையுடையவன் என்றும் வைணவர்களின் திருவுள்ளத்தில் இடம் பெற்றுள்ளன.


4. இதுவே ஆதிக்கோயில். வரதராசர் சந்நிதி அதற்குச் சற்றுப் பின்னர் ஏற்பட்டது. இராமாநுசர் காலத்தில் இது பெரும்புகழ் பெற்றது. இக்காலத்தில் இது வைணவர்கள் பெருமாள் கோயில் என்று வழங்குகின்றனர். அஃது இருக்கும் பகுதியை ‘விஷ்ணுகாஞ்சி’ என்று வழங்குவர். ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் இருக்கும் பகுதியைச் சைவப்பெருமக்கள் சிவகாஞ்சி என்று குறிப்பிடுகின்றனர்.

5. தே.பி. 81,82,83