பக்கம்:வைணமும் தமிழும்.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

வைணவமும் தமிழும்


குணங்களில் “சிறுமாமனிசர்” (திருவாய். 810:3); அமிழ்தலும், “ஊன் மல்கிமோடு பருப்பார்” (திருவாய்.35:7); வாய்க்கரையில் நிற்றலும் கொள்க.

இங்ஙனம் பல,

(இ). மேகம்: ‘உலகம் ஏத்தும் காரகத்தாய்' (திருநெ10) மேகத்தின் இயல்பு போன்ற இயல்புடையவன் வாழும் இடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரகம்’ என்று திருநாமம் ஆயிற்று என்பர்.

எம்பெருமானுக்கு மேகத்தோடு ஒற்றுமை பல நிலைகளால் உய்த்துணரத் தக்கது.

(i). பெய்ய வேண்டும் இடமாகவும் சென்று பெய்யும் மேகம், “வந்தருளியென் நெஞ்சு இடங் கொண்ட வானவர் கொழுந்து’ (திருவாய். 57:7) என்று ஆங்காங்குச் சென்று கருணை மழை பொழிவன் எம்பெருமான்.

(ii). மின்னலுள்ள காலம் நீர் நிரம்பியிருக்கும் மேகம், எம் பெருமானுக்கும் பிராட்டியோடு கூடியிருக்கும் காலத்தில் கருணைரசம் விஞ்சியிருக்கும். “இவள் சந்நிதியிலே காகம் தலைப்பெற்றது: அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்" (முமுட்சு-15) என்ற முமுட்சுப்படியின் திவ்விய சூக்தியும் காண்க.

(iii). மொண்ட இடத்திலும் (கடல்) பெய்யும் மேகம், தனக்கு உபதேசிக்குமவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்


11. இது காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியின் சுற்றுப் பிராகாரத்தில் உள்ள ஒரு சிறு கோயில் (108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று)