பக்கம்:வைணமும் தமிழும்.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

337


(ii) கோழியைப் போலிருப்பான் கோழி எப்போதும் குப்பைகளைச் சீய்த்துச் செத்தைகளை விலக்கி தனக்குப் போக்கியமானவற்றையே உண்டு சீவித்திருக்கும். இங்ஙனமே சிரீவைணவனும் வேதங்களைக் களைந்து அவற்றிலுள்ள தேவதாந்தர மந்தராந்தர முதலிய வாக்கியக் குப்பைகளாகிய சாரமற்றைவைகளை நீக்கி சத்தியம் ஞானம் ஆனந்தம் இவற்றையெல்லாம் நம்மாழ்வார் நான்கு பிரபந்தம் என்னும் அமுதமாக விளைவித்தவைகளையே சதா அநுசந்தித்துக் - கொண்டு வாழ்ந்திருப்பான்,

(iii) உப்பைப்போல் இருப்பான். உணவில் உப்பு அதிகப்பட்டால் அது நிந்திக்கப்படும். தன்னை நிந்தை கூறுமிடத்து மறுமாற்றம் சொல்லாது தன்னையழிய மாறியேனும் தன் சொரூபத்தைத் தழைத்திருப்பவனாய் அவர்களுடைய மகிழ்ச்சியே தனது நோக்கம் என்று கருதியிருப்பான். .

(iv) உம்மைப்போல் இருப்பான் (இது பட்டர் அனந்தாழ்வானை நோக்கிச் சொன்னது). எம்பெருமானுக்குத் ததீயாராதனம் நடைபெறும்போது அவரவர் யோக்கியதைக் கேற்ப முதல் திரை முதல் ஏழு திரைகளிலும் இருக்கச் செய்வது சம்பிரதாயம். பட்டர் அனந்தாழ்வானை இந்தச் சோதனைக் குட்படுத்தி அவமானம் செய்தபோது, அனந்தாழ்வானின் முகம் சேஷத்துவ மிகுதியால் அலர்ந்து மகிழ்ந்து விளங்கக் கண்டார். அதனால் அவர் உண்மையான வைணவர் எனப் பெருமைப் பட்டார்.அனந்தாழ்வான்மூலம் வைணவ இலட்சணத்தை அருளிச் செய்தபோது (வைணவ இலட்சணம் அனந்தாழ்வான் பண்புபோல் இருக்க வேண்டுமென்று பாராட்டிக் கூறும்