பக்கம்:வைணவ உரைவளம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 77 முதல் பத்து 24 முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால்போல் தள்ளி மெல்ல விருத்தங் கிளையாமுன் பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலை யூடு,உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே! (முற்ற - பூர்த்தியாக; மூத்து - கிழத்தனம் அடைந்து; முன்அடி-முன்கால்; இற்றமுறிந்த; இளையாமுன் - அடைவதற்கு முன்னே; வற்ற-மீதியின்றி; வாயான்திருப்பவளத்தை யுடையவன்! இது திருமங்கையாழ்வார் திருவதரியை மங்களா சாசனம் செய்துள்ள திருமொழியிலுள்ள ஒரு பாசுரம், இதில் ஆழ்வார், உடலுக்கு எவ்வளவு கிழத்தனம் வரக் கூடுமோ அவ்வளவும் வந்து, நடந்து செல்ல மாட்டாமல் ஒரு கோலைக் கையிலே ஊன்றுகோலாகப் பிடித்துக் கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக் கொண்டு நடக்க முடியாதது போல ஒரடியும் எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி, தடிபிடித்துக் கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையில் விழுந்திருந்து கொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாகச் சிரமப்படுகின்ற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ரமத் திருத்தலப் பயணத்தை நெஞ்சால் நினைக்க 飞迈瓦 திரு. 1.3:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/102&oldid=920702" இலிருந்து மீள்விக்கப்பட்டது