பக்கம்:வைணவ உரைவளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 85 (முன்-இராமாவதாரத்தில்: வானரம்-சிறிய திருவடி, அரக்கன்-இராவணன்; மன்ஊர்சிறந்த இலங்காபுரி, வாளி-அம்பு; மாளமாண்டு போகும்படி, ஆதி மன்னர்க்குபாண்டவர்களுக்கு: தூது-துரதன்; பெரு நிலத்தார்-பூமியிலுள்ளார்.) திருஎவ்வுளுர்மீது மங்களா சாசனம் செய்யப் பெற்ற பெரிய நிருமொழிப் பாகரம். திருஎவ்வுள் சயனத் திருக் கோலத்தில் உள்ள எம்பெருமான் யார்? என்னில்: திருவடிக் குத் துரது உரைத்தும், இலங்காபுரியை அழித்தவனும் ஆகிய இராமபிரானும், பாண்டவர்க்காக ஒலை எடுத்துக் கொண்டு தூதுபோன கண்ணபிரானுமே ஆவர்' என் கின்றார் ஆழ்வார். பட்டர் : கூரத்தாழ்வானின் திருக்கு மராரான பட்ட ருக்கு இராமாவதாரத்தில் அளவற்ற பட்சபாதம் உண்டு என்பதை எல்லோரும் அறிவர். சிறியாத்தான் என்பவர் பட்டருடைய அருளிச்செயல்களைக் கேட்க விரும்பி ஒரு நாள் அவர் சந்நிதியிலே விடை கொண்டு சக்கரவர்த்தித் திருமகனாருக்கு எல்லா ஏற்ற முண்டேயாகிலும், அன்பர்கட்காகக் கழுத்திலே ஓலை கட்டித் துாதுபோன ஏற்றமில்லையே; அந்த ஏற்றம் கண்ணபிரானுக்கே யன்றோ உள்ளது' என்றார்; அதைப் பட்டர் கேட்டருளி *ஒய்! குணக்கடலாகிய இராமபிரானுக்கு தூதுபோதல் அநிஷ்டம் அன்று காணும்; இட்சுவாகு வமிசத்திலே சார்வ பெளமனாகப் பிறந்தானாகையாலே இராமன் தூது போகப் பெற்றிலனத்தனை; அந்த அவதாரத்திலே திருவடி அங்குமிங்கும் போவது வருவதுமாய்க் கொண்டு துரதகிருத்தியஞ் செய்து வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக்கண்டு நாமும் இப்படி அண்டினவர்களுக்காக துாது போகப் பெற்றிலோமே" என்று திருவுள்ளம் குறை கட்டு அக்குறை தீருகைக்காகவே பின்னை இழிகுலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/110&oldid=920711" இலிருந்து மீள்விக்கப்பட்டது