பக்கம்:வைணவ உரைவளம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 93. கடல் மல்லைத் தலசயனத்து: தலசாயிப் பெருமாள் எழும் தருளி யிருப்பதனால் தலசயனம் என்று பேர் பெற்றதும், கடற்கரையிலே உள்ளதுமான மல்லா புரியிலே என்று பொருன் விரித்துக் கொள்க. மாமல்லபுரத்தில் எம்பெருமான் கொண்டுள்ள திருக் கோலம் சயனத் திருக் கோலங்களில் எந்த வகையிலும்" அடங்காது. இங்கு எம்பெருமான் வெறுந் தரையில் படுத்துக் கிடக்கின்றான். படுக்கப் பாயும் இன்றி, தலைக்கு அணையுமின்றித் தரையில் கிடக்கின்றான். இதனைத் தலசயனம்’ என்றே வழங்குகின்றனர். இவர் தரையில் எழுந்தருளியிருக்க நேர்ந்ததற்குப் புராண வரலாறு" ஒன்றுண்டு. புராண வரலாறு: புண்டரீகர் என்பவர் ஒரு மாமுனிவர்: திருமாலிடம் அளவற்ற பக்தியுடையார். கடற்கரையில் ஒரு பெரிய பூங்காவனத்தை ஏற்படுத்தி அதில் சிறந்த மலர்களை விளைவிக்கின்றார். அம் மலர்களைப் பாற் கடலில் பாயல் கொண்டுள்ள பரந்தாமனின் திருவடியில் சேர்க்க வேண்டும் என்று பாரிக்கின்றார். பாற்கடலில் அடைவதற்கு இடையிலுள்ள கருங்கடலைக் கடக்க 7. திருக்கோலங்கள் : எம்பெருமான் பரமபத தாதன் அர்ச்சையில் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், கிடந்த நிலையிலும், நடந்த நிலையிலும் எழுந்தருளி யிருப்பான். இவற்றுள் அவனது சயனத் திருக்கோலமே (கிடந்த நிலை இருப்பே) கண்டோர் மனத்தைக் கவரத்தக்கது. இந்தச் சயனத திருக்கோலத்திலும் பலவகை உண்டு 108 திவ்விய தேசங்களில் அவன் கிட்டத்தட்ட இருபதில் அனந்தன் மீது சயனம் கொண் டுள்ளான். இதனைப் புயங்க சயனம் (பாம்பனைப் பள்ளி, என்று வழங்குவர். ஏனைய இடங்களில் உள்ளவை உத்தியோக் சயனம், தர்ப்பு சயனம் (புல் படுக்கை), போக சயனம் (இன்பப் படுக்கை), மாணிக்க சயனம், வடபத்திர சயனம் (ஆலிலைப் படுக்கை). வீர சயனம் என்பவையாகும. 8. இது பிரும் மாண்ட புராணத்தில் பரக்க விவரிக்கப் பெற்றுளள்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/118&oldid=920719" இலிருந்து மீள்விக்கப்பட்டது