பக்கம்:வைணவ உரைவளம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி { 03 சொல்லியநுபவத்தல், வடிவழகை வருணித்து அநுபவித்தல், அவன் உகந்தருளிய திவ்விய தேச வளங்களைப் பேசி அநுபவித்தல், அங்கே அபிமானமுள்ள பூரீவைணவர்களின் பெருமையைப் பேசி அநுபவித்தல்-என்று இப்படிப் பலவகைப் பட்டிருக்கும் பகவதநுபவம். இவ்வகைகளுள் மிக அழகான மற்றொரு வகையும் உண்டு. அதாவது ஆழ்வார் தாமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அநுபவித்தல். இப்படி அநுபவிக்கும் திறத்தில் தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் பாசுரம் என்ற மூன்று வகுப்புக ளுண்டு. அப்போது ஆழ்வாருக்குப் பரகாலர்' என்ற ஆண்மைப்பெயர் நீங்கி, பரகால நாயகி என்ற பெண்மைப் பெயர் வழங்கப்பட்டு வரும். தாய் சொல்வது போலவும், தலை மகள் சொல்லுவது போலவும், தோழி சொல்வது போலவும் பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசு கின்றவர் ஆழ்வாரேயாவர் என்பதைப் பாசுரம் ஒதுவதால் ஏற்படும் பயனைக் கூறும் பதிகங்களில் பெண் குரல் மாறி ஆண் குரல் ஒலிப்பதைக் காணலாம். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும், அவற்றுக்குப் பிரதான மான பெயர் ஒன்றேயாயிருக்குமாப்போலே, இன்று மூன்று நிலைமைகளாகச் சொல் மாலைகள் வழிந்து புறப் பட்டாலும் பாசுரம் பேசுபவர் ஆழ்வாரேயாவார். ஆழ்வார் தரமான தன்மையை விட்டுப் பிராட்டி மாருடைய தன்மையை ஏறிட்டுக் கொள்வது ஏதுக்காக? என்னில்: ஆழ்வார் தாமாக அத்தன்மையை ஏறிட்டுக் கொள்ளுகிறார் அல்லர்; அந்த நிலை தானே பரவசமாக வந்து சேர்கின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக மடங்கப் பெண் தன்மையா யிருக்கையாலும், சீவான்மாவுக்குச் சுவாதந்திரிய நாற்றமே யின்றி பாாதந்திரியமே வடிவாயிருக்கையாலும் இவ்வகை களுக்கேற்பப் பெண்ணாக ஏறிட்டுக் கொள்வது வந்தேறி யன்று என்றே கொள்ளலாம். தண்டகாரண்யத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/128&oldid=920730" இலிருந்து மீள்விக்கப்பட்டது