பக்கம்:வைணவ உரைவளம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 வைணவ உரைவளம் வசித்துவந்த முனிவர்கள் இராமபிரானது அழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கைய ராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதிகம் உண்டு. ஆழ்வார்கள் அப்படியன்றியே அப்போதே பெண்மையை யடைந்து புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக் கின்றனர். ஆண் பெண் என்ற நிலைகள் சிற்றின்ப நுகர்ச்சிக் கன்றோ ஏற்பட்டவை? பேரின்ப அநுபவத்தில் ஊன்றின ஆழ்வார்கள் பெண்மையை எய்துவதாகவும், கொங்கை' முதலிய சொற்களையிட்டுப் பாசுரங் கூறுவதாகவும் நிகழ் கின்றது என்னே? எனின்: வேதாந்தங்களில் குறிப்பிடப் பெறும் பக்தி இங்ங்ணம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்பதை அறிகின்றோம். இவர்கள் எம்பெரு மான் மீது கொள்ளும் காமம் பகவத் விஷய காமம் என்று வழங்கப்பெறும். இங்கனம் இவர்கள் மாதவன்மீது கொள்ளும் காமம் மங்கையர் மீது கொள்ளும் காமத்தி னின்றும் வேறு பட்டது. ஆயினும் சிற்றின்ப அநுபவ மாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் இந்த பகவத் விஷய காமத்திற்கும் கூறப்பெறும். தூது, வெறிவிலக்கு, அறத்தொடு நிலை போன்ற துறைகள் பாசுரங்களில் காணப்பெறுவதைக் கொண்டு இதனைத் தெளியலாம். சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல பகவத் விஷயாது பவத்திற்குப் பரபக்தி, பரஞானம், பரமபக்தி இவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று சமயச் சான்றோர் கொள்வர், காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ங்ணமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசு ரங்கள் அருளிச் செய்யப்பெற்றிருப்பதற்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/129&oldid=920731" இலிருந்து மீள்விக்கப்பட்டது