பக்கம்:வைணவ உரைவளம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV வரும் செயல் என் சிந்தனையைக் கடந்து நிற்கின்றது. போலித்தனமானப் பேச்சும், சொல்லும் மலிந்து, உண்மை உணர வழியின்றிப் போன இன்று, என்னுடைய எழுத்தும் சொல்லும் யாருடைய முகமனையும் எதிர்பார்த்தது அல்ல என்பதைக் கூறி, இந்த வெளியீட்டைப்பற்றி உணர்ந்ததைக் -அநுபவித்ததைக்-கூறுவேன். வைணவ உரைவளம" என்ற இந்த வெளியீடு தேனும் கன்னலும் கலந்த சுவை நிறைந்த பாலைப் போன்றது. சுவையின்றித் தள்ள வேண்டிய பக்கம் இந் நூலில் ஒன்றுகூட இல்லை. ஆழ்வார்கள் பாசுரங்களைச் சுவைத்து அநுபவிப்பதற்கு இந்நூல் போன்ற வேறொரு நூலை நான் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. அடியேனை அணிந்துரை வழங்குமாறு ஆசிரியர் பணித்தது பாசத்தாலன்றி அறிவை அளவுகோலாகக் கொண்டு அல்ல; அடியேன் அநுபவித்ததை-நூலை படிக்கும்போது பரவசம் அடைந்ததை-எழுத்தில் வடித்துக் காட்ட இயலாது. எனினும், கடமையைக் கருதி ஒருசிலவற்றை எடுத்துக் காட்டுவேன். ஓர் ஆசாரியனை ஆச்ரயித்து, பணிந்து, கேட்டு, அறிந்து கொள்ள வேண்டியவற்றை ஒரு சிரமமும் இல்லாமல் அறிந்து அநுபவிக்குமாறு உதவுவது இந்த அரிய பக்திக் கருவூலம். ஆசிரியர் வைணவ உரைகள்' என்னும் கடலில் மூழ்கி முத்தெடுத்து வந்து அவற்றில் தாம் கண்டவற்றை ஐதிகம், இதிகாசம், சம்வாதம் என்ற மூவகைகளில் அடக்கி ஆழ்வார் பாசுரங்களுடன் இயைபுபடுத்திக் காட்டுகின்றார். அவற் நுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவேன். ஐதிகம் : (1) பக்த விலோசனம்' என்ற தொடருக்கு (பக்.42) இவர் காட்டும் பொருள் நாம் அறியாதது. பக்தி - சோறு; விலோசனம் - பார் வை; சோறு பார்த்திருக்கும் இடம் என்று பொருள் கூறி, இதற்கு இவர் காட்டும் ஐதிகம் நெஞ்சை நெகிழ்விக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/13&oldid=920732" இலிருந்து மீள்விக்கப்பட்டது