பக்கம்:வைணவ உரைவளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 107 புராண வரலாறு : இத்தலத்து எம்பெருமான் எம்பெரு மாட்டியை இடக்கரத்தில் சுமந்து கொண்டிருப்பதற்குப் புராண வரலாறு ஒன்று உண்டு. சம்புத் தீவில் சரசுவதி நதிக்கரையில் குனி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்கு ஒரு கன்னிகை தோன்றினாள். முனிவர் சுவர்க்கம் புகுந்த பிறகு கன்னிகை கடுந்தவம் புரிந்தாள். நாரத முனிவர் ஒருநாள் அவளைச் சந்தித்துத் திருமணம் ஆகாதவளுக்குச் சுவர்க்கம் கிடைக்காது என்று தெரிவித்தார். உடனே அவள் முனிவர் குழுவை நாடி தன்னை யாராவது ஒருவர் திருமணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பார் அவளை மணம் புரிந்து கொண்டார். ஓர் ஆண்டில் அவளிடம் பெரிய பிராட்டியார் அம்சமாக 360 கன்னிகைகள் தோன்றினர். பின்னர் அவளும் துறக்கம் புகுந்தாள். முனிவர் அக்குழந்தைகளைக் காப் பாற்றும் ஆற்றலின்றிச் சம்புத் தீவிற்கு வந்த அந்தணர்கள் மூலம் திருவிட எங்தை என்ற தலம் இருப்பதை அறிந்து குழந்தைகளுடன் அங்கு வந்தார். நாடோறும் முனிவர் வராக மூர்த்தியைச் சேவித்து வரும் நாளில் கன்னிகை யருக்குத் தகுந்த கணவன்மார் கிடைக்க வேண்டுமென்று கவலையுடன் இருந்தார். பரமபதநாதன் ஒரு மாணி வடிவமாக அவரிடம் வந்து அக்கன்னிகையரைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். நாளொன்றுக்கு ஒரு கன்னிகை வீதம் திருமணம் புரிந்து கொண்டே வந்தார். ஆண்டு இறுதி நாளில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எல்லாக் கன்னிகையரையும் ஒன்று சேர்த்து ஒரே கன்னிகையாக்கி அவளைத் தன் இடப்பக்கத்தில் தாங்கி அந்த நாச்சியார் முகமாக எல்லோ ருக்கும் "ஞானோபதேசம் செய்தார். 360 கன்னிகையரும் ஒருங்கு சேர்ந்து ஓர் உருவான படியால் வராக மூர்த்தி தாங்கிக் கொண்டிருக்கும் நாச்சி யாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்று திருநாமம் வழங்க லாயிற்று (அகிலம்.எல்லாம் ஒன்றானது). ஆண்டும் முடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/132&oldid=920735" இலிருந்து மீள்விக்கப்பட்டது