பக்கம்:வைணவ உரைவளம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 | 1 தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!" என்று இங்ங்னே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம், அதுபோலவே இப் பரகால நாயகியும் ஓதிலும் உன்பேரன்றி மற்றோ தாள்' என்ற வளாக உள்ளாள். 40 தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மை யானை ஆங்கரும்பிக் கண்ணிர்சேர்ந்த தனபு கூரும் அடியவருக் காரமுத மானான் தன்னை கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் கானே!" (தாங்க அருபோர் . ஒருவராலும் தாங்கமுடியாத கொடிய போர்; மாலி-ஒர் அரக்கன், பறவை. கருடன், தராதலத்தோர்.பூமியிலுள்ளவர்கள்; அன்புகூரும்- பக்திபண்ணும்; கண்வளரும்.ஒரு கண் ஏறிவளம் பெற்ற) திருக்கோவலூரின் மீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருமொழி பில் ஒரு பாசுரம். திருமங்கையாழ்வார் கூறுவார்: திருக்கோவலூரில் அடியேனுக்குச் சேவை சாதித்த எம்பெருமான் எப்படிப்பட்டவன்? என்னில்: பெரியதிருவடியை ஊர்தியாகக் கொண்டு போர்க்க ளத்தில் புகுந்து திருவாழியினால் மாலி என்னும் அரக்கனது தலையையறுத்தொழித்துச் சாதுக்களை வாழ்வித்தவன்; அடியவர்கட்கு ஆரமுதம் போன்றவன்' என்று. 88, பெரி, திரு. 8. 10, 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/136&oldid=920739" இலிருந்து மீள்விக்கப்பட்டது