பக்கம்:வைணவ உரைவளம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 வைணவ உரைவளம் கிடைக்கவில்லை. இந்நிலையில் வையம் தகளியா' என்ற என்ற விளக்கை ஏற்றினார். இந்தப் பாசுரத்தின் மகிமை யால் அந்த இடைக்கழியில் பளிச்சென்று ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விட்டது; புறத்தே கவிழ்ந்து கிடந்த இருளும் நீங்கியது. அதே சமயத்தில் பூதத்தாழ்வார் 'அன்பே தகளியா' என்ற ஞானவினக் கேற்றினார். இந்த விளக்கினால் அகத்தே மண்டிக் கிடந்த உள் இருட்டும் நீங்கியது. உடனே அந்தப் பேயாழ்வார் நான்காவது ஆளைக் கண்டுபிடித்து விட்டார். அந்த எக்களிப்பே திருக்கண்டேன்" என்ற பாசுரமாக வடிவங் கொண்டு அந்த நான்காவது ஆள் திருக்கோவலூர் தீங் கரும்பு’ என்று காட்டிவிட்டது. ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டதும் பக்திப் பெருக்கால் திளைத்துப் போயினர். பொய்கை யாழ்வார் தமது பாடலைத் தொடர்ந்து முதல் திருவந்தாதியைப் பாடி முடித்தார். பூதத்தாழ்வார் தமது பாடல் தொடங்கி இரண்டாம் திருவந்தாதி'யை நிறைவு செய்தார். பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி" யைத் தலைக்கட்டினார். இங்ங்ணம் குருபரம்பரை' என்ற நூல் கூறுகின்றது. அஞ்ஞான இருள் அகலப்பெறின் மெய்ஞ்ஞான ஒளி தோன்றி இறைவன் காட்சி அளிப்பான் என்ற உண்மையை முதலாழ்வார்களின் வரலாற்றால் அறிகின்றோம். நீயும் திருமகளும்' என்ற பொய்கை யாழ்வாரின் பாசுரமும் இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்ப தாக உள்ளது. வேதாந்த தேசிகரும் இந்த நிகழ்ச்சியை, 31. முதல். திருவந். 1 82. இரண். திருவந், 1 33. மூன். திருவந். 1 84. முதல், திருவர். 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/139&oldid=920742" இலிருந்து மீள்விக்கப்பட்டது