பக்கம்:வைணவ உரைவளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV] (2) கிடந்தவாறு எழுந்திருந்து பேசும் புதுமை நம்மை பக்திசாரர் காலத்திற்கு இழுத்துச் செல்லுகின்றது. (3) அதுயேன் கோயிலில் (அரங்கத்தில்) சில ஆண்டுகள் வாசம் செய்ய நேர்ந்தபோது செந்தாரப்பட்டி பாகவ தோத்தமர் முகுந்த ராமாநுஜ சுவாமிகளோடு ஆழ்வார் அருளிச் செயல்களைச் சல்லாபித்துக்கொண்டு இருப்பது வழக்கம். ஒரு நாள் தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்க நாதனை நம் அரங்கனாகிய பித்தன்' என் கின்றாரே, அது பொருந்து மாறில்லை; சிவனை வேண்டு மானால் பித்தன் என்று சொல்லலாம். காரணமும் இருக் கின்றது. மேடையில் ஆடவன் பெண் வேடம் பூண்டு நடிப்பதுபோல புருடோத்தமனான சீமந் நாராயணன் ஒரு காரணார்த்தமாகப் பெண் வடிவு கொண்டபோது, சிவன் அவனைப் பெண் என்றே எண்ணிப் பேதுற்றதனால் அவனைப் பித்தன் என்பது பொருந்தும்; நமது சுவாமிக்கு அது தகாதே' என்றார். அவர் கொண்ட ஐயத்திற்கு அன்று என்னால் அமைதி கூற இயலவில்லை. பேராசிரியர் அடியார் பித்தினை உடையவன்' என்று தெளிவுபடுத் தியது (பக்.51) என்னை வியக்க வைக்கின்றது. திருவாய் மொழியின் ஏற்றம்பற்றி (பக். 72 - 73) காட்டப் பெற்றுள்ள ஐதிகம் அற்புதமானது. ஆழ்வார்களின் அருளிச் செயல்கட்குப் பட்டர் கூறும் நயமும் ஐதிகமும் இந் நூலில் பரக்கக் காணலாம். தாய் எ டு த்த சிறு கோலுக்கு மைந்தனுக்கு என்ற தொடருக்கு க் கூறும் விளக்கமும் ஐதிகமும் (பக்.184) வயிறு குலுங்கச் சி ரிக்கவைக்கின்றன. :புரிவதும் புகை பூவே என்பதற்குப் பட்டரின் ஐதிகம் (பக்.264) சாத்திரத்திற்குப் புது விளக்கம் தருவதாக அமை கின்றது. மாயன் என் நெஞ்சில் உள்ளான்' என்ற பாசு ரத்தின் கீழ் அரும்பத உரையில் கண்ட ஐதிகம் (பக்.268) போலி வைணவவர்கட்கு ஒரு சாட்டையடி. கண்ணுளே நிற்கும்' என்ற பாசுரத்தில் இவ்விடத்தில் வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது என்ற ஐதிகத்தின் விளக்கம் உண்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/14&oldid=920743" இலிருந்து மீள்விக்கப்பட்டது