பக்கம்:வைணவ உரைவளம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 15 'பாட்டுக்(கு) உரிய பழையவர் மூவரைப் பண்டு.ஒருகால் மாட்டுக்(கு) அருள்தரும் மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்(கு) இருள்செக நான்மறை அக்தி கடைவிளங்க வீட்டுக்(கு) இடைகழிக் கேவெளி காட்டும்.அம் மெய்விளக்கே ' Fபழையவர்-முதலாழ்வார்கள்: மலிந்து- அதிக மாக; வருத்துதல்-நெருக்குதல்; மாடுசெல்வமாகிய ஆன்மா, மாயன்-திருமால்; இருள்செக-அஞ்ஞானம் நீங்க; நான் மறை அந்தி-உபநிடதம், நடை-வழி; வெளிஉபாயங்கள்) என்று பாராட்டுவர். வரிவண்டு...கண்வளரும் : வண்டுகளின் இசைப்பாட லாகிய இன்ப ரசம் பாயப்பெற்று கரும்புகள் கணுக்கள் வளரப் பெறுகின்றனவாம். இனி, கண்வளரும் என்பதற்கு :உறங்கும்" என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு. தாவரங்கள் இசையில் ஈடுபடும் என்ற சர் ஜே. சி. போலின் கொள்கையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது. இது. கண்ணபிரான் குழலூதிய காலத்தில், சராசரப் பொருள்கள் யாவும் குழலினிசையில் ஈடுபட்டு மெய்மறந்து நின்றது போலவே,வண்டுகள் பாடும் இசையைக் கேட்டு அஃறிணைப் பொருளாகிய கரும்பும் அசைவற்று நிற்கும்படியைச் சொன்னதாகக் கொள்ளலாம். மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா எழுது சித் திரங்கள் போலகின் றனவே ' என்றாற் போல. 35 தே. பி. -89 36. பெரியாழ்; திரு. 3.6:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/140&oldid=920744" இலிருந்து மீள்விக்கப்பட்டது