பக்கம்:வைணவ உரைவளம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வைணவ உரைவளம் கர்மஞானங்களை உடையராகியும் லாரக்ராகிகளாயு மிருக்கின்ற பூரீ வைணவர்களை வண்டாகச் சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட பூரீ வைணவர்கள் பகவத் பாகவத போக்கியதைகளை அநுபவித்த ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக பண்கள் தலைகொள்ளப்பாடி' என்கிற படியே காரதமுனிவர், திருப்பாணாழ்வார், தம்பிரான்மார் முதலானாரைப் போலே இசை பாடுவ துண்டாகையாலே ‘இன்னிசை முரன்று எழும்" எனறது. பகவத் பாகவத குணானுபவத்திற்கு வாய்த்த இடங்களே பொழில் எனப் படும். செருந்தி என்ற ஒருவகை மரத்தைச்சொல்லி அதன் மலரிலே சென்றணைவதாகச் சொன்னது தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே' என்று சொல்லு கிறபடியே சம்சாரமாகிய கொடிய வெய்யிலிலே தபிக்கப் பட்டவர்கட்கு நிழல் தந்து விடாய் தீர்க்கும் நன்மரமாகிய வாசுதேவனுடைய பாதமாமலரிற் சென்று சேர்ந்திருக்கும் இருப்பைச் சொன்னபடி. ஆக, ஸ்ாரக்ராகிகளான (சாரம் அறிந்தவர்கள்) பூரீ வைணவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு பகவத் பாகவத குணாதுபவக் களிப்பாலே யாழினிசை வேதத்தியல்களைப் பாடிக்கொண்டு பகவத் பாதாரவிந்த நிரதர்களாய் வாழுமிடம் திருவயிந்திரபுரம் என்றதாயிற்று. இவ்வகை உள்ளுறைப் பொருள்களைத் திருவுள்ளம் பற்றியே அந்யாப தேசமாக வண்டுகளென்றும், தும்பிக ளெள்றும், கொக்கென்றும், குருகென்றும் லெளகிகப் பொருள்களைக் கொண்டு வருணிப்பதாகச் சில ஆசிரியர் களின் கொள்கையாகும். மானேய் நோக்கு கல்லீர்' என்ற திருவாய் மொழிப் பாசுரத்தில் தேனார் சோலைகள்" என்றவிடத்து வியாக்கியானங்களில் நித்தியப் பிராப்பி யனாய்க் கொண்டு அங்கேயிருக்கிறவன் அடியார்கள் 4. திருவாய், 3.5:2 *o-o: 5. திருவாய், .ே3:9 6. டிெ. 5.9:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/143&oldid=920747" இலிருந்து மீள்விக்கப்பட்டது